அஜித் – சூர்யாவிற்கு இடையே இப்படி ஒரு நட்பா...இதுவரை தெரியாம போச்சே
சென்னை : அஜித் - சூர்யா இடையேயான நட்பு பற்றி இதுவரை வெளியில் தெரியாத தகவல் பலவும் தற்போது வெளியாகி உள்ளது. இதனை இரண்டு ஸ்டார்களின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
அஜித்தை தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடி வருகின்றனர். பலருக்கும் அவர் முன்னுதாரணமாக இருப்பதாக கூறி உள்ளனர். இதற்கு காரணம் அஜித்திடம் உள்ள அனைவரிடமும் எளிமையாக, தன்மையாக பேசும் குணம், கனிவோடு நடந்து கொள்ளும் பழக்கம் தான்.

அஜித் – சூர்யா இடையே நட்பா
அஜித் - விஜய் ரசிகர்கள் இடையே பல காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. ஆனால் அவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் என பலரும் சொல்லி கேட்டிருக்கிறோம். விஜய், அஜித்தின் நண்பர் என்று தான் இதுவரை தகவல் வெளி வந்துள்ளது. ஆனால் அஜித், சூர்யா இடையே நீண்ட காலமாக நல்ல நட்பு இருந்து வருவது பலருக்கும் தெரியாது.

அட ஆச்சரியமா இருக்கே
அஜித் - சூர்யா இருவரும் சினிமாவில் வளர துவங்கிய காலத்தில் சேர்ந்து பல போட்டோக்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். இருவரும் சேர்ந்து ஜாலியாக வெளியிலும் சுற்றி வந்துள்ளனர். இந்த தகவல் தற்போது வெளி வந்து பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஜாலியான சைக்கிள் ரைடு
அப்படி அஜித்தும், சூர்யாவும் இணைந்து எடுத்துக் கொண்ட அரிய போட்டோக்களை இருவரின் ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த போட்டோக்களை பகிர்ந்து, அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள். இதில் அஜித், சூர்யா இருவரும் ஜாலியாக சைக்கிள் ரைடு போன போட்டோ ஒன்று சோஷியல் மீடியாவில் செம டிரெண்ட் ஆகி வருகிறது.

இதுவரை சொன்னதே இல்லையே
இதை பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள், இவர்கள் இருவருக்கிடையே இப்படி ஒரு நட்பு இருப்பது இதுவரை தெரியாமல் போய் விட்டதே. இருவருமே அதை எந்த இடத்திலும் காட்டிக் கொண்டதே இல்லையே என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர். ஆனால் தற்போது இரண்டு ஸ்டார்களும் சினிமாவில் டாப் ஹீரோக்கள் ஆகி விட்டனர். அதோடு செம பிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றனர்.

இருவருமே செம பிஸி
அஜித், ஏகே 61, ஏகே 62 படங்களில் நடித்து வருகிறார். சூர்யாவோ சூர்யா 41, வாடிவாசல், சிறுத்தை சிவா படம், சுதா கொங்கரா படம் என கிட்டதட்ட அரைடஜன் படங்களை கையில் வைத்துள்ளார். இதோடு பல படங்களையும் சூர்யா தனது 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











