அடக்கடவுளே.. அடையாளமே தெரியாமல் மாறிய ’7ஆம் அறிவு’ டாங்லி!

சென்னை: 2011 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஏழாம் அறிவு. ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரித்த இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, ஸ்ருதிஹாசன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஸ்ருதி கதாநாயகியாக அறிமுகமான முதல் திரைப்படம் இப்படம் தான். இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பற்றி வசூலை அள்ளியது.

7ம் அறிவு திரைப்படத்தில் சூர்யா இரண்டு வேடத்தில் நடித்திருந்தார். அரவிந்த் என்றால் கதாபாத்திரத்திலும், போதி தர்மராகவும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த திரைப்படத்திற்கு வில்லனாக நடித்த 'ஜானி ட்ரை நுயன்' நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். அந்த அளவிற்கு தன்னுடைய பார்வையாலே அதாவது 'நோக்கம் வர்மத்தின் மூலமே' அனைவரையும் அடித்து சாய்த்துவிட்டார். இவரின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் மிரட்டு போகும் அளவிற்கு இருந்தது. அப்படி நம்மை கண்களால் வளைத்துப்போட்ட 'ஜானி ட்ரை நுயன்' னின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில் அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் மெலிந்து மொத்தமாக மாறி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் 7ஆம் அறிவு படத்தில் நடித்த டாங்லியா இது என கேட்டு வருகின்றனர்.

7aum Arivu suriya 7
Photo Credit:

டாங்லியா இது?: தமிழ் சினிமா ரசிகர்களால் டாங்லி என்று இவரை கொண்டாடப்பட்ட 'ஜானி ட்ரை நுயன்' 2002 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான 'we were soldiers' படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 'ஸ்பைடர் மேன் 2' படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து ஹாலிவுட்டில் நடித்து வந்த 'ஜானி ட்ரை நுயன்' கடந்த 2007-ம் ஆண்டு ராம் சரண் நடிப்பில் வெளியான 'சிருதா' படத்தில் நடித்தார். அதன்பிறகு தான் '7 ஆம் அறிவு' படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்தார். அந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் 'பிஸ்னஸ்மேன்' படத்திலும், தமிழில் இரும்பு குதிரை, டபுள் ஐ ஸ்மார்ட் படத்தில் நடித்திருந்தார். தற்போது எந்த படத்தில் தலைகாட்டாத இவரின் சமீபத்திய போட்டோவை பார்த்து 7ஆம் அறிவு டாங்லியா இது என கேட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு அடையாளம் தெரியாமல் அவர் மாறி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X