அட..சர்ச்சையை விட்டு தள்ளுங்க.. மாதம்பட்டி ரங்கராஜ் எத்தனை கார் வைத்து இருக்காருனு தெரியுமா?

சென்னை: சோசியல் மீடியாவில் பேசப்படும் பொருளாக மாறி இருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை திருமணம் செய்து கொண்டதால், பட்டிதொட்டி எங்கும் இவரது செய்தியை பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவர் பற்றிய சர்ச்சை செய்திகள் ஒருபுறம் பரவிக்கொண்டிருந்தாலும், கார் விரும்பியான மாதம்பட்டி ரங்கராஜ் எத்தனை கார் வைத்திருக்கிறார் என்பதை இணையவாசிகள் பட்டியல் எடுத்து வருகின்றனர்.

மாதம்பட்டி ரங்கராஜ் மெஹந்தி சர்கஸ் படத்தின் மூலம் நடிகராக மாறினார். அதைத் தொடர்ந்து, கேசினோ, மிஸ் மேகி, பெண்குயின் போன்ற படங்களில் நடித்தார். தற்போது, இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே, திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும், தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் ஜாய் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

Madhampatty Rangaraj Joy Crizildaa Car
Photo Credit:

மாதம்பட்டி ரங்கராஜ்: முதல் மனைவி இருக்கும் போது, அவரை விவாகரத்து செய்யாமல், இரண்டாவதாக எப்படி ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்து கொண்டது சட்டபடி குற்றம் என சோஷியல் மீடியாவில் பலவிதமான விவாதங்கள் எழுந்தன. இதைடுத்து, ஜான் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னுடைய கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் தான், என்னுடைய குழந்தைக்கு அவர் தான் அப்பா. எனக்கும் அவருக்கும், சென்னையில் உள்ள அம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எங்களுக்கு திருமணம் நடந்து விட்டது. நானும் அவரும் ஒரே அப்பார்ட்மெண்டில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என கூறியிருந்தார்.

விதவிதமான கார்: இப்படி மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பலவிதமான சர்ச்சைக்குரிய செய்திகள் இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்க, இணையவாசிகள் பலர் மாதம்பட்டி ரங்கராஜ் எத்தனை கார் வைத்து இருக்கிறார் என்பதை கணக்கு எடுத்துள்ளனர். அதாவது, கார் பிரியரான ரங்கராஜ் அ அளித்த பேட்டி ஒன்றில், எனக்கு சிறுவயதில் இருந்தே கார்களில் மீது அபரிமிதமான ஈர்ப்பு உண்டு. இதனால், பொம்மை வாங்க கடைக்கு சென்றாலும், பொம்மை கார்களை வாங்குவேன். வளர்த்தம் கார் வாங்குவதில் ஆசை அதிகமாகிவிட்டது. அப்படி நான் வாங்கிய முதல் கார் டாடா இண்டிகா என்றார்.

தற்போது மாதம்பட்டி ரங்கராஜ், 4 endeavour, jaguar xf, பிம்டபிள்யூ எக்ஸ் 3, Volvo V40, Mercedes-Benz CLA, porsche macan போன்ற கார்களை வைத்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ், சமீபத்தில் Range Rover Autobiography என்ற காரை புதிதாக வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த காரின் தொடங்க விலையே 3.65 கோடியாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X