விக்ரம் 3 படத்திற்காக சூர்யாவிற்கு பேசப்பட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை : விக்ரம் 3 படத்தில் சூர்யா நடிப்பது ஏறக்குறைய கன்ஃபார்ம் ஆகி விட்டது. இந்த படத்திற்காக சூர்யாவிற்கு பேசப்பட்டுள்ள சம்பளம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் இன்று மிகவும் பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. சூர்யா 41, வாடிவாசல், சிறுத்தை சிவாவுடன் படம், சுதா கொங்கராவுடன் படம் என வரிசையாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் என வரிசையாக சூர்யா படங்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

விக்ரமை பேச வைத்த சூர்யா
இதனால் சூர்யாவின் அடுத்தடுத்த படங்களை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக கமலின் விக்ரம் படத்தில் சூர்யா நடிப்பதாக தகவல் வெளியானதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வேற லெவலில் எகிறியது. சூர்யாவின் ரோல் பற்றிய பேச்சே படத்திற்கு மிகப் பெரிய ப்ரொமோஷனாக அமைந்தது.

விக்ரம் 3...கன்ஃபார்ம் செய்த கமல்
விக்ரம் படத்தில் சூர்யா, ரோலக்ஸ் என்ற ரோலில் நடித்திருந்தார். க்ளைமாக்சில் வெறும் 10 நிமிடங்கள் வரும் சூர்யாவின் காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டு, பாராட்டையும் பெற்றது. ரோலக்ஸ் சார் என்ற பெயர் சோஷியல் மீடியாக்களில் செம டிரெண்டானது. இதற்கிடையில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் சூர்யா நடிக்க உள்ளதை கமலே கன்ஃபார்ம் செய்து விட்டார். இதனால் விக்ரம் 3 படத்தில் சூர்யா நடிக்க உள்ளது கிட்டத்தட்ட முடிவாகி விட்டது.

சம்பளம் வாங்காதது உண்மை தானா
இதற்கிடையில் விக்ரம் படத்தில் 10 நிமிடங்கள் வரும் காட்சியில் நடிப்பதற்காக லோகேஷ் கனகராஜ் கேட்டதுமே உடனடியாக ஓகே சொன்ன சூர்யா, படத்திற்காக ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லையாம். கமல் மீதான மரியாதை காரணமாகவே இந்த ரோலில் நடிக்க சூர்யா ஒப்புக் கொண்டாராம். இன்று கமல் வெளியிட்ட நன்றி தெரிவிக்கும் வீடியோவில் கூட, தன் மீதான அன்புக்காக மட்டுமே சூர்யா விக்ரம் படத்தில் நடித்தார் என அழுத்தமாக கூறி இருந்தார்.
Recommended Video

விக்ரம் 3 ல் சூர்யாவின் சம்பளம்
இந்த வீடியோவில், சூர்யாவிற்கான நன்றியை அடுத்து தாங்கள் இணைய போகும் படத்தில் மொத்தமாக காட்ட முடிவு செய்திருப்பதாகவும் கூறி உள்ளார். இதற்கிடையில், கமல் - சூர்யா மீண்டும் இணைந்து நடிக்க உள்ள விக்ரம் 3 படத்திற்காக சூர்யாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். தற்போது சூர்யா ஒரு படத்திற்கு 35 முதல் 45 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இந்நிலையில் பிரமிக்க வைக்கும் அளவிலான தொகை தான் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











