டியூட் படத்தில் நடிக்க பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது டியூட். இத்திரைப்படத்தில், மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார்.சரத்குமார், ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஜென் ஸீ தலைமுறையினரின் வரவேற்பை பெற்று வரும் பிரதீப் ரங்கநாதன் பிராங்க் மற்றும் சர்ப்ரைஸ் கொடுக்கும் நிகழ்வுகளை நடத்தும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரை காதலிக்கும் சரத்குமாரின் மகள் மமிதா பைஜு ப்ரொபோஸ் செய்கிறார். ஆனால், பிரதீப் உன் மீது எனக்கு காதல் வரவில்லை என்று சொல்லிவிட மன வேதனை அடைந்த மமிதா பைஜு மேற்படிப்புக்காக வெளியூருக்கு சென்று விடுகிறாள். இத்தனை நாட்களாக தன்னுடன் தோழியாக சுற்றி வந்த மமிதா பைஜு தன்னுடன் இல்லாததால், அவளை பற்றி நினைக்கும் பிரதீப்பிற்கு இது தான் காதல் என்பதை தெரிந்து கொண்டு, இதை தனது மாமாவும் அமைச்சருமான சரத்குமாரிடம் சொல்கிறார்.

dude Pradeep Ranganathan salary
Photo Credit:

டியூட் படத்தின் கதை: இதைக்கேட்டு சந்தோஷப்படும் சரத்குமார், இருவருக்கும் திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். திருமணம் நடக்கும் தினம் அன்று, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லையென்றும், தான் வேறு ஒருவரை காதலித்து வருவதாக சொல்கிறாள் மமிதா. இதனால், திருமணம் நின்றதா? அதன் பிறகு என்ன ஆனது என்பதே 'டியூட்' படத்தின் திரைக்கதை. ஜென் ஸீ தலைமுறையினரின் பல்ஸை சரியாக தெரிந்து கொண்ட பிரதீப் ரங்கநாதன் அனைவரும் ரசிக்கும் ஒரு திரைப்படமாக கொடுத்து இருக்கிறார். பிரதீப் ரங்கநாதனின் பயணத்தில் மற்றொரு சூப்பர் ஹிட் திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. மமிதா பைஜுவுக்கும் கனமான கதாபாத்திரம், அதை அவரும் உணர்ந்து நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். அதே போல சரத்குமார் இதுவரை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த திரைப்படத்தில் தியேட்டரை அலறவிட்டுள்ளார்.

சம்பளம் எவ்வளவு தெரியுமா: இந்த நிலையில், டியூட் படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரதீப் ரங்கநாதனுக்கு 12 கோடியும், மமீதாவுக்கு 60 லட்சம், சரத்குமார் 70 லட்சம், நேகா செட்டிக்கு 40 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் வெற்றியின் மூலம் பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுஇருந்த நிலையில், டியூட் திரைப்படம் வெளியானால், எல்ஐகே திரைப்படம் டிசம்பர் 28ஆம் தேதிக்கு தியேட்டரில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X