அடேங்கப்பா... இன்ஸ்டாகிராமில் சமந்தா போடும் ஒரு போஸ்ட்டுக்கு இவ்வளவு வருமானமா?
சென்னை : ஒரு சோஷியல் மீடியா போஸ்ட்டுக்கு சமந்தா பெறும் வருமானத்தை கேட்டு இந்திய திரையுலகை சேர்ந்த நடிகைகள் அனைவரும் ஆடிப் போய் உள்ளனர். இப்படி ஒரு வளர்ச்சியா என ஆச்சரியமாக கேட்டு வருகிறார்கள்.
தென்னிந்திய நடிகைகளில் டாப் ஹீரோயினாக இருந்த சமந்தா, புஷ்பா படத்தில் ஊம் சொல்றியா மாமா பாட்டிற்கு ஆடிய பிறகு, ஒரே பாட்டில் உலக ஃபேமஸ் ஆகி விட்டார். புஷ்பா படம் இந்தியா முழுவதும் மாஸ் ஹிட் அடிச்சதுக்கு காரணமே சமந்தா ஆடிய அந்த ஒரு பாட்டு தான் என கூறப்படுகிறது.

சினிமாவில் செம பிஸி
தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் ஆகிய படங்கள் சமந்தா நடித்து, ரிலீசிற்காக காத்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து பைலிங்குவல் படமான யசோதா, பாலிவுட்/ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஏப்ரல் 28 ம் தேதி ரிலீசாக உள்ளது.

தனி பிராண்டான சமந்தா
கணவர் நாகசைதன்யாவுடனான விவாகரத்தை அறிவித்த பிறகு சமந்தா என்ன செய்தாலும் அது வைரலாகி விடுகிறது. அவர் போடும் டிரெஸ் முதல், செய்யும் சின்ன சின்ன செயல்கள் வரை செம பாப்புலர் ஆகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், கடந்த 6 மாதங்களில் இந்திய சினிமாவில் தனி பிராண்டாகவே சமந்தா உருவெடுத்து உள்ளார்.

இத்தனை ஃபாலோவர்சா
சினிமாவில் மட்டுமல்ல சோஷியல் மீடியாவிலும் மிக பாப்புலரான பிரபலங்களில் இவரும் ஒருவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் சமந்தாவை 2 கோடி பேர் பின் தொடர்கிறார்கள். இவர்கள் சமந்தா என்ன போஸ்ட் போட்டாலும் உடனே அதனை டிரெண்டிங் ஆகி விடுகிறார்கள். தனது போட்டோஷுட் போட்டோக்கள் மட்டுமின்றி, சில வர்த்தக நிறுவனங்களின் தயாரிப்புக்களையும் இவர் ப்ரமோட் செய்யும் போஸ்ட்களையும் பதிவிட்டு வருகிறார்.

ஒரு போஸ்ட்டுக்கு இவ்வளவா
அப்படி கமர்ஷியல் ப்ராடக்ட்களின் விளம்பரங்கள், ப்ரமோட் செய்யும் போஸ்ட் போடுவதற்கு ஒரு போஸ்ட்டுக்கு 8 முதல் 10 லட்சம் வரை வாங்கி வந்தார் சமந்தா. ஆனால் சமீப காலமாக அவரது புகழ் பல மடங்கு உயர்ந்து விட்டதால் பாலிவுட்டிலும் சமந்தாவிற்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்களாம். இதனால் இனி விளம்பர போஸ்ட்டுகளுக்கு 12 முதல் 15 லட்சம் வாங்க முடிவு செய்திருக்கிறாராம்.
Recommended Video

இப்படியே போனால் என்ன ஆகுறது
இதை கேள்விப்பட்டதும், என்னது...ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு 15 லட்சம் வருமானமா என இந்திய திரையுலகை சேர்ந்த நடிகைகள் பலரும் ஆச்சரியத்தில் வாயடைத்து போய் உள்ளனர். ஏற்கனவே ஒரு படத்தில் நடிக்க சமந்தா 3 முதல் 4 கோடி சம்பளம் வாங்குகிறார். விளம்பர படங்களுக்கு ஒரு கோடி சம்பளம் வாங்குகிறார். புஷ்பா படத்தில் ஒரு பாட்டிற்கு ஆடுவதற்கு மட்டும் 5 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். 2022ம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரத்தின்படி சமந்தாவின் சொத்து மதிப்பு 89 கோடி. சினிமா, விளம்பர படங்கள் ஆகியவற்றில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் இப்படி வேறு வருமானம் என்றால் சமந்தா ரேஞ்ச் வேற லெவலில் எகிறுதே என ஷாக் ஆகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











