»   »  16 வயதில் ரூ.3,000 சம்பளத்தில் ஹீரோயினான ஜெயலலிதா

16 வயதில் ரூ.3,000 சம்பளத்தில் ஹீரோயினான ஜெயலலிதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயலலிதா தான் ஹீரோயினாக நடித்த முதல் படத்திற்கு ரூ.3 ஆயிரம் சம்பளம் வாங்கினார்.

தனது தாய் சந்தியாவுடன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற இடத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்து கன்னட படமான ஸ்ரீ சைலா மகாத்மே படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஜெயலலிதா.

Do you Know Jaya's first salary as heroine?

அதன் பிறகு ஒய்.ஜி. பார்த்தசாரதியின் நாடக குழுவில் சேர்ந்து நடித்து வந்தார். தனது தாயுடன் பார்ட்டி ஒன்றுக்கு சென்ற இடத்தில் ஜெயலலிதாவை பார்த்த கன்னட இயக்குனர் பி.ஆர். பந்துலு அவரை சின்னட கொம்பே என்ற கன்னட படத்தில் கல்யாண் குமாருக்கு ஜோடியாக நடிக்க வைக்க நினைத்தார்.

தனது விருப்பத்தை பந்துலு சந்தியாவிடம் தெரிவிக்க முதலில் அவர் மறுத்துவிட்டார். பள்ளி மாணவியான ஜெயலலிதாவின் படிப்பு பாதிக்கப்படாத வகையில் படப்பிடிப்பை நடத்துவதாக அவர் வாக்குறுதி அளித்த பிறகே சந்தியா சம்மதம் தெரிவித்தார்.

ஹீரோயினாக நடிக்க ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சம்பளம் ரூ. 3 ஆயிரம். அதன் பிறகு அவர் வெண்ணிற ஆடை படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

English summary
Jayalalithaa's debut as heroine was Kannada movie Chinnada Gombe. She was paid Rs. 3,000 for the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil