விஜய்க்கு ஜோடியாக நடித்த மகேஷ் பாபு மனைவி... எந்த படத்தில் தெரியுமா
சென்னை : தமிழில் டாப் ஹீரோவாக இருக்கும் விஜய், பல பிரபல நடிகைகளுடன் ஜோடியாக நடித்து விட்டார். அவர்களில் பலர் திரையுலகில் தனக்கு நெருங்கிய நண்பர்களாக இருக்கும் டாப் ஹீரோக்களின் மனைவியாக ஆகி உள்ளனர் பின்னாளில்.
அப்படி அஜித் மனைவி ஷாலினி, சூர்யாவின் மனைவி ஜோதிகா ஆகியோரும் சிலர். அதே போல் தெலுங்கு சூப்பர் ஹீரோ மகேஷ் பாபுவின் மனைவியும் ஒருவர். இந்த ரகசியம் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோக்களான விஜய்யும், மகேஷ் பாபுவும் நல்ல நண்பர்கள். கடந்த லாக்டவுன் சமயத்தில் கூட மகேஷ்பாபுவின் க்ரீன் இந்தியா சேலஜ்சை ஏற்றுக் கொண்டு, விஜய்யும் தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்ட ஃபோட்டோக்கள் வெளியாகி, வைரலாகின. இதனை இருவரின் ரசிகர்களும் கொண்டாடினர்.

மகேஷ்பாபு மனைவி விஜய்க்கு ஜோடியா
மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா சிரோத்கரும் விஜய்யுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். விஜய் நடித்த திருமலை படத்தில் முதலில் நம்ரதா தான் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவரும் விஜய்யும் நடிக்கும் சில காட்சிகளை படமாக்கி உள்ளனர். ஆனால் பல்வேறு காரணங்களில் பிறகு நம்ரதா, திருமலை படத்திலிருந்து வெளியேறி உள்ளார்.

இது தான் காரணமா
அதற்கு பிறகு தான் ஜோதிகா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டைரக்டர் ரமணா இயக்கத்தில் 2003 ல் ரிலீசான திருமலை படம் மிகப் பெரிய ஹிட் படமாகவும் அமைந்தது. ஏற்கனவே விஜய் நடித்த தமிழன் படத்தில் உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவை அறிமுகப்படுத்தியதை போல், திருமலை படத்தில் முன்னாள் மிஸ் இந்தியாவான நம்ரதாவை நடிக்க வைக்க படக்குழு நினைத்தார்களாம்.

கண்டதும் காதல்
மகேஷ்பாபு, நடிகை நம்ரதாவை 2000 ம் ஆண்டு வம்சி என்ற படத்தின் ஷுட்டிங்கில் தான் முதன் முதலில் பார்த்துள்ளார். முதல் பார்வையிலேயே இருவருக்கும் இடையே காதல் பற்றிக் கொண்டது. இருவரும் காதலித்து வந்த நிலையில் 2005 ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நட்சத்திர தம்பதிக்கு கவுதம் கிருஷ்ணா என்ற மகனும், சித்தாரா என்ற மகளும் உள்ளனர்.

இருவருமே பிஸி
தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட படமும், விஜய்யின் பீஸ்ட் படமும் உள்ளது. பரசுராம் இயக்கும் சர்காரு வாரி பாட படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

ரஷ்யா செல்லும் விஜய்
இதே போல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சென்னையில் ஷுட்டிங் முடித்த பிறகு விரைவில் ரஷ்யா செல்ல உள்ளார் விஜய்.


Click it and Unblock the Notifications











