»   »  'ஓபனிங் கிங்' ஆன 'ரெமோ' சிவா: முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

'ஓபனிங் கிங்' ஆன 'ரெமோ' சிவா: முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படம் ஒரே நாளில் உலக அளவில் ரூ.7-8 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த ரெமோ படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. படத்தை பார்த்தவர்கள் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் கச்சிதமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Do you Know Remo's first day collection?

படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் திருட்டு டிவிடியில் வெளியாவதை தடுக்க வெளிநாடுகளில் பிரீமியர் ஷோக்கள் நடத்தப்படவில்லை.


இந்நிலையில் ரெமோ ரிலீஸான அன்று மட்டும் உலக அளவில் ரூ.7-8 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ஓபனிங் கிங் நடிகர்கள் வரிசையில் சிவகார்த்திகேயனும் சேர்ந்துள்ளார்.


ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் கேமரா வேலைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sivakarthikeyan's Remo has collected Rs. 7-8 crores on the very first day of its release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil