»   »  ஒரு நாளுக்கு ரூ.11 கோடி வாங்கும் சல்மான் கானின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஒரு நாளுக்கு ரூ.11 கோடி வாங்கும் சல்மான் கானின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானின் முதல் சம்பளம் 75 ரூபாயாம்.

பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். மேலும் விளம்பர படங்களிலும் நடித்து கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார்.

அதிகம் சம்பளம் வாங்கும் பாலிவுட் நடிகர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது. அதில் சல்மானுக்கு இரண்டாவது இடம் கிடைத்தது.

முதல் சம்பளம்

முதல் சம்பளம்

என்னுடைய முதல் சம்பளம் 75 ரூபாய் என்று நினைக்கிறேன். நான் தாஜ் ஹோட்டலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூட்டத்தோடு கூட்டமாக நடனமாடியதற்காக அந்த சம்பளம் கிடைத்தது. என் நண்பர் ஒருவர் ஆடினார். அதனால் அவர் என்னையும் அழைத்துச் சென்று ஆட வைத்தார் என்று சல்மான் தெரிவித்துள்ளார்.

ரூ. 750

ரூ. 750

கேம்ப கோலா என்ற கூல் ட்ரிங் விளம்பரத்தில் நடித்து ரூ. 750 சம்பாதித்தேன். அதன் பிறகு ரூ. 1,500 தான் பல காலம் என் சம்பளமாக இருந்தது என்கிறார் சல்மான் கான்.

படம்

படம்

மேனே பியார் கியா படத்திற்கு ரூ. 31 ஆயிரம் சம்பளம் கிடைத்தது. அதன் பிறகு என் சம்பளம் ரூ. 75 ஆயிரமாக அதிகரித்தது என்று சல்மான் கான் கூறியுள்ளார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியின் 11வது சீசனை தொகுத்து வழங்க நாள் ஒன்றுக்கு சல்மான் கானுக்கு ரூ. 11 கோடி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
He is one of the highest paid actors today but superstar Salman Khan reveals his first-ever salary was merely Rs 75. Salman occupied the second spot on Forbes list of the 'Highest Paid Actors in Bollywood' for the year 2017.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil