தனுஷ் மகன் கேப்டன்; துணை கேப்டன் இந்த நடிகரின் மகளா?...நம்பவே முடியல
சென்னை : இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிவை அறிவித்தனர். இது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு தனுஷ் தனது நடிப்பிலும், ஐஸ்வர்யா தனது இயக்கப் பணியிலும் பிஸியானார்கள்.
Recommended Video
பிரிவை அறிவித்து பல மாதங்கள் ஆன நிலையில்,தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பற்றிய ஒவ்வொரு விஷயமும் செம வைரலாகி வருகிறது. தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ஓடிடியில் ரிலீசாகி, தோல்வியை சந்தித்த நிலையில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் அவருக்கு மிகப் பெரிய வரவேற்பை கொடுத்தது.

அடுத்ததாக நானே வருவேன், வாத்தி, கேப்டன் மில்லர் என வரிசையாக தனுஷ் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. தி கிரே மேன் 2 படத்திலும் நடிக்க தனுஷ் கமிட்டாகி உள்ளார். அடுத்தடுத்த படங்களில் தனுஷ் மீண்டும் செம பிஸியாகி உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது மூத்த மகன் யாத்ராவின் பள்ளி விழாவில் தனுஷ் கலந்து கொண்டார். இதே விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். பிரிந்திருக்கும் தனுஷும், ஐஸ்வர்யாவும் தங்கள் மகனுக்காக ஒன்றாக சேர்ந்து பள்ளி விழாவில் கலந்து கொண்ட கொண்டது ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. இந்த விழா போட்டோக்களும் வைரலாகின.
தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிவுக்குப் பிறகு மீண்டும் ஒன்றாக எடுத்துக் கொண்ட படங்கள் இணையத்தில் வைரலாகின.அந்த விழாவில், யாத்ரா தனுஷ் பள்ளி விளையாட்டு கேப்டனாக பதவியேற்றனர். இதற்கு பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த விழாவில் தனுஷின் மகன் யாத்ரா அருகே ஒரு சிறுமி நின்று கொண்டிருந்தார். அவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அந்த சிறுமியும் ஒரு நடிகர் குடும்ப வாரிசு தான். ஆர்னா அஸ்வின் சேகர் என்ற அந்த சிறுமி ஜூனியர் விளையாட்டு கேப்டனாகவும் பதவியேற்றார்.ஆர்னா , நடிகர் அஸ்வின் சேகரின் மகளும், மூத்த நகைச்சுவை நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகரின் பேத்தியும் ஆவார்.
அந்த போட்டோவை தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார் எஸ்.வி.சேகர். திரையுலக பிரபலங்கள் இருவரின் குழந்தைகள் பள்ளி விளையாட்டுப் பிரிவுக்கு கேப்டனாகவும், துணை கேப்டனாகவும் இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











