twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தத்துவ மேதைகள் சாக்ரட்டீஸ், பிளாட்டோ.. நடிகை ஆனந்தியின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் தெரியுமா?

    |

    சென்னை: கயல் திரைப்படம் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமான நடிகைதான் கயல் ஆனந்தி. முதல் படத்திலேயே தமிழக அரசின் மாநில விருதை வென்றவர்.

    குடும்பப்பாங்கான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்த ஆனந்தியின் சினிமா கேரியரில் மறக்க முடியாத படங்களாக அமைந்தது கயல், பரியேறும் பெருமாள் மற்றும் கமலி ஃப்ரம் நடுக்காவேரி. தற்சமயம் நதி என்ற படத்தில் நடித்துள்ளார்.

    ஆனந்தியின் இயற்பெயர் ஹாசிகா. ஹாசிகா என்றால் புன்னகை என்று பொருள். அதனால்தானோ என்னவோ இயக்குநர் பிரபு சாலமன் ஹாசிகாவிற்கு ஆனந்தி என்ற பெயரை வைத்தார் போல!

    அஜித்தின் ஏகே 61 படத்தில் இணைந்த வில்லன் நடிகர்...இப்போ யார் தெரியுமா? அஜித்தின் ஏகே 61 படத்தில் இணைந்த வில்லன் நடிகர்...இப்போ யார் தெரியுமா?

    பெயருக்கு பின்னாலிருக்கும் கதை

    பெயருக்கு பின்னாலிருக்கும் கதை

    மூடர் கூடம் திரைப்பட இயக்குநர் நவீனின் மனைவியான சிந்துவின் தம்பியைத்தான் கயல் ஆனந்தி திருமணம் செய்துள்ளார். ஆனந்தியின் பெயருக்கு பின்னால் இப்படி ஒரு கதை இருப்பது போல அவருடைய கணவர் மற்றும் மகன் பெயர்களுக்கு பின்னால் கூட ஒரு கதை உள்ளது. மரைன் இஞ்சினியராக இருந்து துணை இயக்குநராக மாறிய ஆனந்தியின் கணவர் பெயர் சாக்ரட்டீஸ். ஆம், தத்துவ மேதை சாக்ரெட்டீஸின் பெயரைத்தான் அவரது தந்தை வைத்துள்ளார்.

    மூடர் கூடம் நவீன் & சிந்து

    மூடர் கூடம் நவீன் & சிந்து

    மூடர் கூடம் திரைப்படத்தில் ஒரு கதாநாயகியாக முஸ்லிம் கதாப்பாத்திரத்தில் நடித்தவர்தான் சிந்து. கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரிந்தபோது, தனது நண்பர் ஒருவருக்காக அந்தப் படத்தில் நடித்திருந்தார். ஷூட்டிங்கின்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்து, அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நவீனை மேடையில் வைத்தே ஒருமையில் பேசி அனைவரையும் அதிர்ச்சியாக்கினார். குறிப்பாக நவீனின் குருநாதரான இயக்குநர் பாண்டிராஜ் அதனை ஒரு பேட்டியில் குறிப்பிட்டே சொல்லி இருப்பார்.

    நாத்திக குடும்பம்

    நாத்திக குடும்பம்

    நவீன் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும், இவர்களின் காதலுக்கு மதம் தடையாக இருக்கவில்லை. காரணம், நவீன் பகுத்தறிவு பேசும் நாத்திகவாதி. அதே போல் சிந்து மட்டுமல்ல, அவரது குடும்பமே பகுத்தறிவு பேசும் நாத்திகர்களாம். அதனால்தான் இருவரின் காதலுக்கு மதம் ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. நவீன் ஒரு சினிமாக்காரர் என்பது மட்டுமே சிந்துவின் தந்தைக்கு பிரச்சனையாக இருந்துள்ளது. ஆனால் அதையும் தாண்டி அவர்களுக்கு பதிவுத் திருமணம் செய்து வைத்தார்.

    மேதைகளின் பெயர்கள்

    எனவே தான் சிந்துவின் தந்தையும் கயல் ஆனந்தியின் மாமனாருமான ஒரு பகுத்தறிவாளர் மதம், இனம், மொழி தாண்டிய பெயர்களைத்தான் தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சூட்டியுள்ளார். மகனுக்கு சாக்ரட்டீஸ், பேரனுக்கு ப்ளாட்டோ, உறவினர்களுக்கு ஸ்டாலின், லெனின் போன்ற பெயர்களை வைத்துள்ளார்.

    English summary
    Do you know the impact of Philosophical geniuses Socrates and Plato on actress Anandi's life?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X