டிரெண்டிங்கான வாடிவாசல்...தெறிவிக்க விடும் சூர்யா ரசிகர்கள்...ஏன்னு தெரியும் ?

சென்னை : ட்விட்டரில் வலிமை, எதற்கும் துணிந்தவன் பற்றிய தகவல்களால் வெளி வந்து கொண்டிருக்கையில் திடீரென சூர்யா, வாடிவாசல் போன்ற ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் தெரிந்ததும் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சமீப காலமாகவே ரஜினி, அஜித், விஜய் பற்றிய ஹேஷ்டாக்குகள் தான் அதிகம் ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்து வருகின்றன. இந்த நிலை மெல்ல மெல்ல மாறி மற்ற நடிகர்களின் படங்கள் பற்றிய அப்டேட்கள் வெளியிடப்படும் போதும் டிரெண்டிங் ஆகிது. ஆனால் அப்டேட்டே இல்லாமல் சூர்யா ரசிகர்கள் தொடர்ந்து ட்விட்டர் டிரெண்டிங்கை அலற டிட்டு வருகின்றனர்.

டிரெண்டிங்கான வாடிவாசல்

டிரெண்டிங்கான வாடிவாசல்

சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தியேட்டரில் 5 மொழிகளில் மார்ச் 11 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்காக #Suriya, #Etharkkum thunindhavan போன்ற ஹேஷ்டேக்கள் அடிக்கடி டிரெண்டிங் ஆக்கப்பட்டு வந்தன. எதற்கும் துணிந்தவன் படத்தின் ப்ரோமோக்கள் படத்தின் மீதான ஆர்வத்தை தொடர்ந்து தூண்டி வருகின்றன. இந்நிலையில் இன்று திடீரென சூர்யா நடிக்கும் வாடிவாசல் படம் டிரெண்டிங் ஆக்கப்பட்டது.

பாதியில் நின்ற வாடிவாசல்

பாதியில் நின்ற வாடிவாசல்

இதற்கு காரணம் ஜி.வி.பிரகாஷ் வாடிவாசல் படத்தின் பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்டது மட்டுமல்ல, நிஜமாகவே வாடிவாசல் படம் பற்றிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த படம் வாடிவாசல் ஜல்லிக்கட்டை மையக்கருவாகக் கொண்டு, எழுத்தாளர் சி.எஸ்.செல்லப்பாவின் நாவலை அடிப்படையாகக் கொண்டு வாடிவாசல் படம் எடுக்கப்பட்டடு வந்தது. இந்த படத்தில் ஆரம்ப கட்ட பணிகள் 2021ம் ஆண்டு ஜுலை மாதம் துவங்கப்பட்டது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள், சூர்யாவிற்கு கொரோனா தொற்று என பல காரணங்களால் ஷுட்டிங் பாதியிலேயே நின்றது.

என்னது ஓடிடி ரிலீசா

என்னது ஓடிடி ரிலீசா

வாடிவாசல் படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் 2020ம் ஆண்டு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் ஷுட்டிங் தள்ளி போனதால் வெற்றிமாறன் விடுதலை படத்திலும், சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திலும் பிஸியானதால் வாடிவாசல் பணிகள் பாதியிலேயே நின்றன. அந்த படம் பாதியிலேயே கை விடப்பட்டதாக தகவல் வெளியானது. சமீபத்தில் கூட வாடிவாசல் படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும், இதற்காக ரூ.50 கோடிக்கு படத்தின் வெளியீட்டு உரிமத்தை முன்னணி நிறுவனம் ஒன்று கேட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இதனால் தான் டிரெண்டிங் ஆனதா

இதனால் தான் டிரெண்டிங் ஆனதா

லேட்டஸ்ட் தகவலாக வாடிவாசல் படத்தின் Pre Visualization வேலைகள் மும்பையில் தீவிரமாக நடந்து வருகிறதாம். வாடிவாசல் படத்தில் அப்பா-மகன் என இரு ரோல்களில் நடிப்பதாக கூறப்படுவதால் அதற்காக சூர்யா தயாராகி வருகிறாராம். எதற்கும் துணிந்தவன், விடுதலை பணிகளை இவர்கள் முடித்த பிறகு வாடிவாசல் படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. Pre Visualization பணிகள் நடக்கும் தகவல் வெளியானதற்கு தான் சூர்யா ரசிகர்கள் #VadiVasal ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X