பிக்பாஸ் அல்டிமேட்....புதிய ஹோஸ்ட் சிம்புவிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா ?

சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகிய பிறகு, புதிய ஹோஸ்டாக சிம்பு அறிவிக்கப்பட்டுள்ளார். பிக்பாஸ் அல்டிமேட்டிற்காக அவருக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டுள்ளது என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் ஐந்து சீசன்களை தொடர்ந்து ஓடிடி வெர்சனாக துவங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல் தொகுத்து வழங்கி வந்தார். ஜனவரி 30 ம் தேதி போட்டியாளர்களுடன் பிக்பாஸ் அல்டிமேட் துவங்கப்பட்டது. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கமல் வந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

வெளியேறிய போட்டியாளர்கள்

வெளியேறிய போட்டியாளர்கள்

இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபினய் ஆகியோர் எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து வனிதா விஜய்குமார், மனஅழுத்தம் மற்றும் உடல்நிலை காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக பிக்பாசிடம் சொன்னார். பிக்பாஸ் பலமுறை பேசியும் வனிதா தனது முடிவில் உறுதியாக இருந்ததால் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

புதிய ஹோஸ்டான சிம்பு

புதிய ஹோஸ்டான சிம்பு

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வந்த கமல், தன்னால் ஷுட்டிங் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதாக கூறி பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகினார். பிக்பாஸ் சீசன் 6 ல் திரும்பி வர உள்ளதாக அறிக்கை வெளியிட்டார். பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து கமல் விலகியதால், அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் தான் இனி ஷோவை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சிம்பு புதிய ஹோஸ்ட் என அறிவிக்கப்பட்டது. முதல் ப்ரோமோவிலேயே செம ஸ்டைலான தோற்றத்தில் தோன்றி அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார் சிம்பு.

சிம்புவிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா

சிம்புவிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா

முதல் முறையாக ரியாலிட்டி ஷோ ஒன்றை சிம்பு தொகுத்து வழங்க வந்துள்ளார். ஒவ்வொரு வார இறுதியிலும் வந்து சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இதற்காக ஒரு எபிசோட்டிற்கு ஒரு கோடி ரூபாய் சிம்புவிற்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். மொத்தமாக சிம்பு தொகுத்து வழங்க உள்ள எபிசோட்களுக்காக அவருக்கு ஐந்து முதல் 6 கோடிகள் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். நாளை சிம்பு வரும் முதல் எபிசோட் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

கமலுக்கு எவ்வளவு கொடுத்தார்கள்

கமலுக்கு எவ்வளவு கொடுத்தார்கள்

சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். சிம்பு தற்போது ஒரு படத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமலுக்கு ஒரு வாரத்திற்கு ரூ.3 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாம். வார இறுதி நாட்களுக்கான ஷுட்டிங்கை கமல் ஒரே நாளில் முடித்து விடுவாராம். இதையே இரண்டு நாட்கள் ஒளிபரப்புவார்களாம். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமலுக்கு மொத்தமாக ரூ.50 கோடி வரை சம்பளமாக தரப்பட்டதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X