For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அண்ணாமலை, சூர்யவம்சம்! ஒரே நாளில் வெளிவந்த இரு படங்களுக்கிடையே இப்படி ஒரு ஒற்றுமையா?

  |

  சென்னை: அண்ணாமலை திரைப்படம் வெளிவந்து 30 வது ஆண்டு, சூர்யவம்சம் படம் வெளிவந்து 25 ஆம் ஆண்டு. இந்த இரண்டு படங்களும் ஜூன் 27 அன்று வெளிவந்தன. இந்த படங்களில் வரும் இரண்டு பாடல்களில் உள்ள ஒற்றுமை ஆச்சர்யமூட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த படங்களில் வரும் இரண்டு பாடல்கள் உள்ள ஒற்றுமை ஆச்சர்யமூட்டும் விதமாக அமைந்துள்ளது.

  Do you know the similarities between suryavamsam and Annamalai movies released on the same day?

  ரஜினிகாந்த் நடித்து 1992 ஆ ஆண்டு வெளி வந்த படம் அண்ணாமலை இந்தப்படம் ரஜினி, குஷ்பூ, மனோரமா, ஜனகராஜ், சரத்பாபு ராதாரவி நடித்த படம். குஷ்புவுக்காக கொண்டையில் தாழம்பூ என்கிற பாடலும், வந்தேண்டா பால்காரன் எனும் பாடலும், வெற்றி நிச்சயம் பாடலும், ஒரு பெண் புறா என்கிற ஏசுதாஸ் பாடிய பாடலும் தேவாவின் இசையில் கலக்கலாக அமைந்தது.

  குட் நியூசை க்யூட்டா சொன்ன ஆலியா பட்... குவியும் வாழ்த்துக்கள் குட் நியூசை க்யூட்டா சொன்ன ஆலியா பட்... குவியும் வாழ்த்துக்கள்

  ரஜினி அரசியல் பேசுவதாக அவர் பேசிய வசனங்களை ரசிகர்கள் எடுத்துக்கொண்டு கொண்டாடினர். "மலடா அண்ணாமல", "நீ சொல்றதையெல்லாம் கேட்டுக்கொண்டு போகிற பழைய அண்ணாமலை இல்லை", "கூட்டிக்கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்" போன்ற பஞ்ச வசனங்கள் அப்போது பிரபலம். ரஜினிக்கான பிஜிஎம்-ம் பிரபலம். நண்பனால் துரோகம் செய்யப்பட்டு நடுத்தெருவுக்கு வரும் ரஜினி பின்னர் மனைவி, தாய், நண்பன் துணையுடன் முன்னுக்கு வருவார்.

  Recommended Video

  Annamalai | 90's Kids மனதை விட்டு நீங்கா படம், Rajinikanth | Kollywood | Filmibeat Tamil

  இதே போல் 1997 ஆம் ஆண்டு ஜூன் 27 அன்று வெளியானது சூர்யவம்சம். இன்றுடன் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறது. இந்தப்படத்தில் சரத்குமாருடன் சேர்ந்து மணிவண்ணன் அடிக்கும் கூத்துகள், ஆர்.சுந்தர்ராஜனை கலாய்ப்பது செம காமெடியாக இருக்கும். மஹா பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா? என்கிற வசனம் மிகப்பிரபலம். சூர்யவம்சம் படத்தின் வெற்றிக்கு காரணமே வலுவான கதைதான்.

  காதலியால், பெற்றோரால் புறக்கணிக்கப்படும் இளைஞன் படிப்பறிவு இல்லாத நிலையில் அவரது நிலையைப்பார்த்து இரக்கப்பட்டு காதலிக்கும் பணக்கார வீட்டு பெண் திருமணம் செய்ய இருவரையும் வீட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்ட நிலையில் தனியாக வந்து பேருந்து ஓட்டுநராக வாழ்க்கையைத்தொடங்கும் சரத்குமார் படிப்படியாக முன்னேறுவார். மனைவி தேவயானி ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவார்.

  இதில் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால் அண்ணாமலை படத்தில் வெற்றி நிச்சயம் என்கிற பாடலில் ரஜினி படிப்படியாக முன்னேறி நடசத்திர ஓட்டல் அதிபராவார். அதேபோல் சூர்யவம்சம் படத்தில் எளிய நிலையில் பேருந்தை வாங்கி ஓட்டும் சரத்குமார் நட்சத்திர ஜன்னலில் பாடலில் பெரும் பணக்காரர் ஆகிவிடுவார், மனைவி ஐஏஎஸ் பாஸாகிவிடுவார், பேரனுக்கும் தாத்தாவுக்கும் மெல்லிய உறவு தொடங்கிவிடும்.

  ஒரே நாளில் வெளியான இந்த இரு படங்களிலும் தெரிந்தோ தெரியாமலோ இயக்குநர் மோட்டிவேஷன் பாடலை வைத்து அது ரசிகர்களை பெரிதும் கவர்ந்து பெரும் வரவேற்பையும் பெற்றது ஏதேச்சையாக அமைந்த ஒன்று என்றாலும் சுவாரஸ்யம் மிக்க ஒன்று என்றுத்தான் எண்ணத்தோன்றுகிறது.

  English summary
  There is an interesting similarity between two songs from different mega-hit movies suryavamsam and Annamalai released on the same day, June 27.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X