ஜெயலலிதாவின் மனம் கவர்ந்த பாடகி சங்கீதா சஜித்...அட அவரா இவர்...இது தெரியாம போச்சே
சென்னை : பிரபல பாடகி சங்கீதா சஜித் நேற்று காலமானார். இந்நிலையில் இவரை பற்றிய பல அரிய தகவல்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அட...அவரா இவர் என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்த சினிமா பின்னணி பாடகியான சங்கீதா சஜித், என்றே சொந்தம் ஜானகிகுட்டி என்ற படத்தில் அந்தரி பூவாட்டம் பொன்னுருளி என்ற பாடலை பாடி பாடகியாக அறிமுகமானார். அய்யப்பனும் கோசியும் படத்தில் சோக பாடல் ஒன்றையும் பாடி உள்ளார். இந்த பாடல் செம ஹிட் ஆனது.

ஹிட் பாடல்கள் பாடிய சங்கீதா
தமிழில் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மிஸ்டர் ரோமியா படத்தில் தண்ணீரை காதலிக்கு மீன்களா இல்லை பாடலை பாடி உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் 200 க்கும் அதிகமான பாடல்கள் பாடி உள்ள சங்கீதா கடைசியாக குருதி என்ற மலையாள படத்தில் பாடினார்.

சிறுநீரக பிரச்சனையால் உயிரிழப்பு
சென்னையில் வசித்து வந்த சங்கீதா, சிறுநீரக நோய் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள சகோதரியின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்த சங்கீதா, நேற்று காலை மரணமடைந்தார். இவரின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளது. இவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மனம் கவர்ந்த பாடகி என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஜெயலலிதாவிடம் பரிசு வாங்கிய சங்கீதா
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது ஞானப்பழத்தை பிழிந்து என்ற பாடலை அதே ராகத்தில் பாடி அசத்தினார் சங்கீதா. அந்த விழாவில் கலந்து கொண்ட ஜெயலலிதா, மேடைக்கே சென்று தனது கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்க செயினை கழற்றி சங்கீதாவிற்கு பரிசாக வழங்கி, பெருமைப்படுத்தினார்.

அட அவரா இவர்
ஜெயலலிதா கையால் தங்க செயின் பரிசு வாங்கிய அந்த பாடகி இவர் தானா என பலரும் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர். கே.பி.சுந்தராம்பாள் பாடிய ஞானப்பழத்தை பிழிந்து பாடலை அதே போலவே பாடி ஜெயலலிதாவின் மனதை கவர்ந்த சங்கீதா, தனது இனிமையான குரலால் ரசிகர்கள் பலரின் மனங்களை கவர்ந்த சங்கீதாவை மரணம் தழுவியது இசை உலகிற்கு மிகப் பெரிய இழப்பாக கருதப்படுகிறது. அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











