ஆமா.. அத்தனை பேரும் யூடியூப் ஓடிப்போய்.. "சக்கு சக்குன்னு" சரமாரியா தேடுறாங்களே ஏன் தெரியுமா?

சென்னை : சக்கு சக்க வத்திகிச்சு பாடல் தான் தற்போது சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி வருகிறது. சமீப நாட்களாக பலரும் முணு முணுக்கும் பாடலாக மட்டுமல்ல, சமீபத்தில் இணையத்தில் அதிகம் தேடப்பட்டு, பார்க்கப்பட்ட பாடலும் இது தான்.

இந்த பாடல் அசுரன் படத்தில் இடம் பெற்றது. அசுரன் என்றால் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்த அசுரன் படம் கிடையாது. 1995 ம் ஆண்டு அருண்பாண்டியன், ரோஜா, மன்சூர் அலிகான், நெப்போலியன் நடிப்பில் வெளிவந்த படம்.

இந்த படம் பற்றிய தகவல்களை தான் தற்போது இணையத்தில் அதிகமானவர்கள் தேடி வருகின்றனர். இந்த படம் பற்றிய தகவல்களை பார்த்து பலரும் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.

அட இதெல்லாம் தெரியாதே

அட இதெல்லாம் தெரியாதே

ப்ரிடேட்டர் படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் ஹிட்டானதன் தாக்கத்தால் எடுக்கப்பட்ட த்ரில்லிங் படம் அசுரன். இந்த படத்தை வேணு பிரபாகரன் எழுதி, இயக்கி இருந்தார். JohnMctiernan இயக்கிய Predator படத்தை மையமாக வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டது. பல காட்சிகளும் அதில் வருவதை போலவே இருக்கும்.

அசுரனுக்கு பின்னால் இவ்வளவு கதை இருக்கா

அசுரனுக்கு பின்னால் இவ்வளவு கதை இருக்கா

இந்த படத்தின் ஹீரோ என்னவோ அருண்பாண்டியன் தான். ஆனால் படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. ஹைலைட்டாக அமைந்தது மன்சூர் அலிகானின் நடிப்பு தான். இந்த படத்தில் வீரபத்திரன் என்ற ரோலில் தான் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். விஜயகாந்த் நடித்து சூப்பர் ஹிட்டான கேப்டன் பிரபாகரன் படத்தில் மன்சூர் அலிகான் அதே வீரபத்திரன் கேரக்டரை இந்த படத்திலும் பயன்படுத்தி இருந்தனர்.

செம பாட்டுப்பா

செம பாட்டுப்பா

ஆர்.கே.செல்வமணி திரைக்கதை எழுதிய அசுரன் படத்திற்கு, ஆதித்யன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் 5 பாடல்கள் இருந்தாலும் சக்கு சக்கு பாடல் தான் அந்த சமயத்தில் அனைவரையும் ஆட்டம் போட வைத்தது. பிறைசூடன் வரிகளில் உருவாக்கப்பட்ட இந்த பாடலை ஆதித்யனே இசையமைத்து, சுஜாதாவுடன் இணைந்து பாடி இருந்தார்.

டிரெண்டாக இவர் காரணமில்லை

டிரெண்டாக இவர் காரணமில்லை

சக்கு சக்கு பாடலில் இரண்டு நிமிடங்கள் மட்டும் தான் மன்சூர் அலிகான் ஆடி இருந்தார். தற்போது 26 வருடங்களுக்கு பிறகு அதே பாடலுக்கு, அதே மாடுலேஷனுடன் மன்சூர் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இது தற்போது செம டிரெண்டாகி வருகிறது. மன்சூர் அலி கான் ஆடியதால் இந்த வீடியோ டிரெண்டாகி இருக்கலாம். ஆனால் சக்கு சக்கு பாடல் டிரெண்டானதற்கு அவர் காரணம் இல்லை.

லோகேஷ் செய்த வேலையா இது

லோகேஷ் செய்த வேலையா இது

விக்ரம் படத்தின் பல இடங்களில் இந்த பாடலை லோகேஷ் பயன்படுத்தி இருப்பார். இது தான் இந்த பாடலை விக்ரம் ரிலீசிற்கு பிறகு டிரெண்டாக்கி உள்ளது. விக்ரம் படத்தின் துவக்கத்தில், கமலை கடத்த வருபவர்கள் காரில் அமர்ந்து மொபைல் போனில், சக்கு சக்கு பாடலை தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இதே போல் பல இடங்களில் இந்த பாடல் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

அட ஆமாங்க...கமலே பேசிருக்கார்

அட ஆமாங்க...கமலே பேசிருக்கார்

அவ்வளவு ஏன், கமலே ஒரு இடத்தில் சக்கு சக்கு வத்திக்கிச்சு என டயலாக்காக இந்த பாடலை சொல்லி இருப்பார். விக்ரம் படத்தில் இந்த பாடல் வந்த பிறகு தான் டிரெண்டிங்கில் தெறிவிட்டு வருகிறது. பலரும் இந்த பாடலை நெட்டில் தேட துவங்கி விட்டனர். அசுரன் என்ற பெயரில் இப்படி ஒரு படம் ரிலீசானதே பலருக்கு விக்ரம் படத்திற்காக இந்த பாடலை தேடும் போது பலருக்கும் தெரிந்துள்ளது.

மற்ற டைரக்டர்களும் பண்ணுங்கப்பா

மற்ற டைரக்டர்களும் பண்ணுங்கப்பா

லோகேஷின் இந்த வழியை பின்பற்றி மற்ற டைரக்டர்களும் தங்களின் படங்களில் பழைய பாடல்களை பயன்படுத்தினால், ரசிகர்கள் மறந்து போன பல பாடல்கள் மீண்டும் ஹிட்டாகி விடும் என பலரும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X