Don't Miss!
- News
இது விளையாட்டுக்கு கிடைத்த கெளரவம்.. நெகிழ்ச்சியில் தடகள வீராங்கனை பிடி உஷா!
- Finance
ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!
- Travel
மாலத்தீவுகளுக்கு சற்றும் குறைவில்லாத இந்த இந்திய நகரத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Technology
Jio பயனர்களுக்கு இனி Netflix இலவசம்: ஆக்டிவேட் செய்வது எப்படி?
- Automobiles
பெட்ரோல், டீசல் வண்டிகளை பயன்படுத்த விரைவில் தடை... கால் டாக்சி ஓட்டுபவர்களுக்கு வருகிறது புதிய ஆப்பு!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரமாக முக்கிய முடிவை எடுக்க வேண்டாம்...
- Sports
6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இதற்காக தான் விக்ரம் படத்தில் சூர்யா நடித்தாரா...இது தெரியாம போச்சே
சென்னை : விக்ரம் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்ததற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளதாம். இது பற்றிய தகவல் தற்போது வெளியாகி செம டிரெண்ட் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. பல படங்களில் அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார். பாலாவுடன் சூர்யா 41, வெற்றிமாறனுடன் வாடிவாசல், ரவிக்குமார் படம், சிறுத்தை சிவா படம், சுதா கொங்கராவுடன் மற்றொரு படம் என வரிசையாக கமிட்டாகி நடித்து வருகிறார் சூர்யா.
இதற்கிடையில் மாதவன் இயக்கி, நடித்திருக்கும் ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படத்திலும் கெஸ்ட் ரோல் செய்துள்ளார். கடந்த சில நாட்களாகவே Talk of Kollywood ஆக இருப்பதே இந்த விஷயம் தான்.
கௌதம் மேனனுக்கு இரண்டு EX காதலிகளா... அவரே சொன்ன தகவல்!

எப்போ படத்தை ரிலீஸ் பண்ணுவீங்க
ஏற்கனவே கமல் படம் என்பதால் விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. இதில் சூர்யா நடிக்கிறார் என்ற தகவல், படத்தின் மிரட்டலான டிரைலர் ஆகியன படத்தை எப்போது ரிலீஸ் செய்வார்கள் என ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கே கொண்டு போய் உள்ளது. இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் விக்ரம் படம் ஜுன் 3 ம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

ஆமாம் சூர்யா இருக்காரு
இரண்டு நாட்களுக்கு முன் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விக்ரம் படத்தில் சூர்யா நடித்திருப்பதை டைரக்டர் லோகேஷ் கனகராஜே டிரைலர் வெளியீட்டு விழாவில் கன்ஃபார்ம் செய்தார். லோகேஷ் மற்றும் கமல் ஆகியோர் இந்த படத்தில் சூர்யா நடித்ததற்கு அவருக்கு நன்றி தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சூர்யா நடித்த சீன்களின் கிளிம்ப்ஸ் வெளியானது.

வெறும் 10 நிமிட காட்சியா
விக்ரம் படத்தில் சூர்யா நடித்த சீன்கள் இரண்டு நாட்கள் மட்டுமே படமாக்கப்பட்டதாம். படத்தில் சூர்யா வரும் காட்சிகள் 10 நிமிடங்கள் மட்டுமே இடம்பெறுமாம். அதுவும் க்ளைமாக்சில் தான் சூர்யா வரும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாம். படத்தில் சூர்யா அற்புதமாக நடித்துள்ளார் என டிரைலர் வெளியீட்டு விழாவிலும் கமல், லோகேஷ் ஆகியோர் கூறினர்.

சூர்யா நடிக்க இது தான் காரணமா
லேட்டஸ்ட் தகவலின் படி, சிறிய ரோலாக இருந்தாலும் அழுத்தமான ரோல் என்பதால் இதில் சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என கமல் தான் கூறினாராம். படத்தில் நடிப்பதற்காக சூர்யாவிடம் கேட்ட போது கொஞ்சமும் யோசனையோ, தயக்கமோ இல்லாமல் உடனடியாக ஓகே சொல்லி விட்டாராம். கமலின் மன்மதன் அம்பு படத்தில் ஒரு பாடலில் சூர்யா கெஸ்ட் ரோல் செய்திருப்பார்.

இப்படி ஒன்னு இருக்கா
அதனால் தான் சூர்யாவை நடிக்க வைக்க கமல் நினைத்தாராம். சூர்யாவிற்கு கமல் மீது மிகுந்த மரியாதை உண்டாம். கமலை தான் தனது வழிகாட்டியாக நினைக்கிறாராம் சூர்யா. அதனால் தான் அவரது கோரிக்கைக்கு மறுப்பு சொல்லாமல் உடனடியாக ஓகே சொல்லி விட்டாராம். சமீபத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவின் நடிப்பு தான் இந்த படத்திலும் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என கமலை நினைக்க வைத்ததாம்.