Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக்பாஸ் சீசன் 6 ல் இப்படி ஒரு சர்ப்ரைசா...ஆவலை எகிற வைக்கும் ஹாட் தகவல்
சென்னை : விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். உலகம் முழுவதும் அதிகமானவர்களால் விரும்பி பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவும் இது தான் என சொல்லப்படுகிறது.
பிக்பாஸ் தமிழ் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில், ஓடிடி வெர்சனாக பிக்பாஸ் அல்டிமேட் 24 மணிநேர நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. இதில் முந்தைய 5 சீசன்களை சேர்ந்த போட்டியாளர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
பிக்பாஸ் சீசன் 5 டைட்டிலை ராஜு வென்ற நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 டைட்டிலை பாலாஜி முருகதாஸ் வென்றார். இதைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6 எப்போது துவங்கப்படும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்க 3 மடங்கு சம்பளம் கேட்ட சல்மான் கான்.. என்னங்க ஒரு நியாயம் வேணாமா!

பிக்பாசிலிருந்து விலகிய கமல்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய 5 சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கினார். இதைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் ஆரம்பத்தில் கமல் தான் தொகுத்து வழங்கினார். பிறகு விக்ரம் படத்தின் ஷுட்டிங் காரணமாக கமல் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதில் சிம்பு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ரசிகர்களை கவர்ந்த சிம்பு
சிம்பு தொகுத்து வழங்கிய விதம் அனைவரையும் கவர்ந்தது. பாரபட்சம் பாராமல் அனைத்து போட்டியாளர்களையும் அவர் வச்சு செய்தது ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. இதனால் சிம்பு வந்த பிறகு நிகழ்ச்சி சுவாரஸ்யமாக துவங்கியது.

பிக்பாஸ் 6 க்கு கண்டிப்பா வருவேன்
அதே சமயம் பிக்பாஸ் டீமுடன் கமலுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்காததால் கமல் பிக்பாசில் இருந்து வெளியேறியதாக தகவல் பரவியது. ஆனால் அதை இல்லை என மறுத்ததுடன், பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தான் நிச்சயம் வர உள்ளதாக கமல் உறுதி அளித்து அறிக்கை வெளியிட்டார்.

பிக்பாஸ் 6 தொகுப்பாளர் யார்
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 அக்டோபர் மாதம் துவங்க உள்ளதாக முதலில் தகவல் வெளியானது. தற்போது நவம்பர் மாதத்திற்கு நிகழ்ச்சி தள்ளி போவதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவதாக சொல்லப்பட்டாலும், கமலை விட சிம்பு தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலர் கருதுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் கமல், சிம்பு இருவரும் அடுத்தடுத்த பட வேலைகளில் பிசியாக இருக்கிறார்கள்.

என்னது இப்படி ஒரு சர்ப்ரைசா
லேட்டஸ்ட் தகவலின் படி, ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கமல் - சிம்பு இருவரும் சேர்ந்து பிக்பாஸ் சீசன் 6 ஐ தொகுத்து வழங்க போகிறார்களாம். ஆனால் கமல் தொகுத்து வழங்குவது உறுதியாகி விட்டது. சிம்பு, பிக்பாஸ் சீசன் 6 க்கு தொகுப்பாளராக வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்றே சொல்லப்படுகிறது.