»   »  மெர்சல் படத்தில் விஜய்க்கு எத்தனை ரோல் தெரியுமா?... வெளிவராத ரகசியங்கள்!

மெர்சல் படத்தில் விஜய்க்கு எத்தனை ரோல் தெரியுமா?... வெளிவராத ரகசியங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : மெர்சல் படத்தில் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் இணையதளங்களில் அனல் பறக்கும் நிலையில் அவருக்கு இந்தப் படத்தில் எத்தனை கதாபாத்திரங்கள் என்ற ரகசியத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜயின் 61வது படம் பெயர் அறிவிக்கப்படாமல் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று படத்தின் பெயருடன் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது.

இன்று விஜய் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் 61வது படத்தின் பெய்ர், போஸ்டர்கள் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மெர்சலான ரசிகர்கள்

மெர்சலான ரசிகர்கள்

மெர்சல் பட போஸ்டர்கள் வெளியான 3 மணி நேரத்திலேயே 31ஆயிரம் பேர் அதனை ரீடுவீட் செய்துள்ளனர். போஸ்டர்களுடன் ரசிகர்கள் இன்று அவரது பிறந்தநாளை ரகளைப்படுத்தி வருவதோடு ரசிகர்களின் புரைஃபைல் பிச்சராக இது மாறியுள்ளது.

என்ன கதை

என்ன கதை

இந்நிலையில் மெர்சல் படத்தின் கதைக்களம் என்னவென்பது ரசிகர்களின் அடுத்தகட்ட எதிர்பார்ப்பாக உள்ளது. படத்தின் டைட்டில் டிசைனில் இருந்து போஸ்டரில் இருக்கும் விஷயங்களை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து வருகின்றனர்.

போஸ்டரை அலசும் ரசிகர்கள்

போஸ்டரை அலசும் ரசிகர்கள்

மெர்சல் டைட்டிலில் மெ எழுத்தில் மாட்டுக்கொம்பு, ல் எழுத்தில் மாட்டின் வால் உள்ளது போன்று டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதோடு 61 என்று போஸ்டரில் இருப்பதை தலைகீழாக பார்த்தால் விஜய் என்று தெரிவதாகவும் ஒரு செய்தியை பரப்பி வருகின்றனர்.

3 ரோல்கள்

3 ரோல்கள்

மெர்சல் படத்தில் விஜய்க்கு 3 கதாபாத்திரங்கள் என்ற சீக்ரெட்டும் தற்போது உடைபட்டுள்ளது. கிராமத்து கெட்டப்பில் ஒரு விஜய், நகரத்து கெட்டப்பில் ஒரு விஜய் என்று போஸ்டர்கள் வெளியிடப்பட்டதன் காரணமும் அதுதானாம்.

விரைவில் 3வது போஸ்டர்

விரைவில் 3வது போஸ்டர்

இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ள விஜய் மூன்றாவதாக ஒரு கேரக்டரிலும் நடித்துள்ளாராம். அந்த கெட்டப் டாக்டர் கெட்டப், விரைவில் அந்த போஸ்டரும் வெளியாகும் என்று கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Vijay's has 3 roles in Merasal movies and the third look would be going to release soon
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil