»   »  நடிக்க வரும் முன்பு நயன், மம்மூட்டி, மோகன்லால் என்ன வேலை பார்த்தாங்க: தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

நடிக்க வரும் முன்பு நயன், மம்மூட்டி, மோகன்லால் என்ன வேலை பார்த்தாங்க: தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: படங்களில் நடிக்க வரும் முன்பு நயன்தாரா, மோகன்லால், மம்மூட்டி ஆகியோர் என்ன வேலை பார்த்துக் கொண்டிருந்தனர் என்று தெரியுமா?

மலையாள திரையுலகின் இரண்டு பெரிய ஜாம்பவான்கள் மோகன்லாலும், மம்மூட்டியும். பேரன், பேத்தி எடுக்கும் வயதில் இருந்தாலும் இன்றும் ஹீரோவாக வலம் வருகிறார்கள். சேட்டன் ரசிகர்களும் அவர்களை கொண்டாடுகிறார்கள்.

இந்நிலையில் மோகன்லால, மம்மூட்டி நடிக்க வரும் முன்பு என்ன வேலை செய்தனர் என்று தெரிய வேண்டுமா?

மோகன்லால்

மோகன்லால்

மோகன்லால் திருவனந்தபுரத்தில் உள்ள மகாத்மா காந்தி கல்லூரியில் பி. காம். படித்துவிட்டு குஸ்தி வீரராக இருந்தார். 1977-78ம் ஆண்டு அவர் கேரள மாநில குஸ்தி சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

மம்மூட்டி

மம்மூட்டி

முகமது குட்டியாக பிறந்த மம்மூட்டி எர்ணாகுளத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. படித்துவிட்டு இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்தார். அதன் பிறகே சினிமா படங்களில் நடிக்க வந்துவிட்டார்.

ஜெயராம்

ஜெயராம்

ஜெயராம் கலாடியில் உள்ள ஸ்ரீ சங்கரா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்தவர். மெடிக்கல் ரெப்பாக இருந்தவர் பின்னர் மிமிக்ரி கலைஞர் ஆனார். மிமிக்ரி மூலம் அவர் மலையாள திரையுலகில் நுழைந்தார்.

நயன்தாரா

நயன்தாரா

டயானா மரியம் குரியனாக பிறந்த நயன்தாரா திருவல்லாவில் உள்ள மார்தோமா கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தவர். நடிக்க வரும் முன்பு கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக மாடலிங் செய்தார்.

மடோனா செபாஸ்டியன்

மடோனா செபாஸ்டியன்

மடோனா செபாஸ்டியன் பெங்களூரில் உள்ள கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் பி.காம். படித்தவர். பாடகியாக இருந்த அவர் டிவியில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

நிவின் பாலி

நிவின் பாலி

பி.டெக் படித்த நிவின் பாலி பெங்களூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்துள்ளார். அதன் பிறகே படங்களில் நடிக்க வந்துள்ளார்.

பார்வதி

பார்வதி

நடிகை பார்வதி திருவனந்தபுரத்தில் உள்ள செயின்ட்ஸ் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துள்ளார். பரதநாட்டிய கலைஞர். மலையாளம் மியூசிக் சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர்.

துல்கர் சல்மான்

துல்கர் சல்மான்

அமெரிக்காவில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் பிபிஎம் படித்தவர் துல்கர் சல்மான். படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் வேலை செய்த அவர் பின்னர் துபாயில் ஐடி துறை தொடர்பான தொழில் செய்து வந்தார்.

நஸ்ரியா நஸீம்

நஸ்ரியா நஸீம்

நஸ்ரியா நஸீம் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் நுழைந்தார். பின்னர் மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றை தொகுத்து வழங்கி வந்தார்.

English summary
Malyalam artistes did some odd jobs before entering into film industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil