தனுஷின் மாறன் ரிலீஸ்...ஓடிடி.,யில் எப்போ பார்க்கலாம்...உற்சாகத்தில் ரசிகர்கள்
சென்னை : துனுஷின் மாறன் பட ரிலீஸ் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர். படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
டைரக்டர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஆக்ஷன் அரசியல் த்ரில்லர் படம் மாறன். இதனை கார்த்திக் நரேன் எழுதி, இயக்கி உள்ளார். தொடரி, பட்டாஸ் படங்களைத் தொடர்ந்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் உடன் தனுஷ் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம் இது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் பேனரில் டி.ஜி.தியாகராஜன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

முதல் முறையாக தனுஷ்
மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், ராம்கி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷ் முதல் முறையாக பத்திரிக்கையாளராக நடித்துள்ள படம். இதில் இரண்டு பாடல்களை தனுஷ் பாடி உள்ளார். அதிலும் சிட்டுக்குருவி பாடலை அவரே எழுதி, பாடி உள்ளார். ஊழல் அரசியல்வாதியான சமுத்திரக்கனியை எதிர்த்து போராடும் இன்வஸ்டிகேட் ஜர்னலிஸ்டாக தனுஷ் நடித்துள்ள படம்.

மாறனை எப்போ பார்க்கலாம்
இந்த படம் மார்ச் 11 ம் தேதியான நாளை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதில் லேட்டஸ்ட் அப்டேட்டாக மாறன் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் மாலை 5 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பெரிய ஸ்டார்களின் படங்கள் அதிகாலையில் ரிலீஸ் செய்யப்பட்டு வரும் நிலையில், தனுஷ் படத்தை மாலையில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஹாட்ஸ்டார் பிளான்
இந்த தகவல் ரசிகர்களை மிகவும் உற்சாகமடைய வைத்துள்ளது. மாலையில் ரிலீஸ் செய்தால் அதிகமானவர்கள் படத்தை பார்க்க வசதியாக இருக்கும் என கருதியே ஹாட்ஸ்டார் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மாறன் படம் நேரடியாக மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதற்காக வித்தியாசமான முறையில், மிகச் சிறப்பாக ப்ரொமோஷன் செய்துள்ளது ஹாட் ஸ்டார்.

படக்குழு நம்பிக்கை
தனுஷின் 43வது படமாக உருவாக்கப்பட்டுள்ள மாறன் படத்தில் தனுஷ் இதுவரை நடிக்காத ரோலில் நடித்திருப்பதால் அவரது ரசிகர்களை மட்டுமின்றி பலரையும் இந்த படம் கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











