சூர்யாவின் அடுத்த பட டைரக்டர் இவரா... என்ன ரோலில் நடிக்கிறார் தெரியுமா?
சென்னை : கோலிவுட்டிலேயே கைவசம் அதிக படங்களை வைத்திருப்பவர் சூர்யா தான். ஹீரோவாக மட்டுமல்ல, கெஸ்ட் ரோல்களிலும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
விக்ரம் படத்தில் ரோலக்ஸ் ரோலில் நடித்து அசத்திய சூர்யா, அடுத்ததாக மாதவனின் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அதுவும் நடிகர் சூர்யாவாகவே நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அக்ஷய்குமார் நடிக்கும் சூரரைப் போற்று இந்தி ரீமேக்கிலும் சூர்யா கெஸ்ட் பண்ண உள்ளார். இதில் அக்ஷய் குமாரின் ஃபிரண்ட் ரோலில் சூர்யா நடிக்கலாம் என கூறப்படுகிறது.

வரிசை கட்டும் சூர்யா படம்
சூர்யா தற்போது டைரக்டர் பாலா இயக்கும் சூர்யா 41 படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல், ஜெய்பீம் டைரக்டர் ஞானவேல் இயக்கும் படம், சிறுத்தை சிவா இயக்கும் படம், சுதா கொங்கரா இயக்கும் படம் என வரிசையாக கமிட்டாகி உள்ளார்.

லிஸ்ட் போய்கிட்டே இருக்கே
இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் 3, கைதி 2 படங்களிலும் சூர்யா நடிக்க உள்ளதாக கமலும், லோகேஷ் கனகராஜும் ஏற்கனவே கூறி விட்டனர். இதனால் சூர்யா 41 படத்திற்கு பிறகு அடுத்து யாருடைய படத்தில் சூர்யா நடிக்க போகிறார் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சூர்யா பிறந்தநாள் ட்ரீட் என்ன
ஜுலை 22 ம் தேதி சூர்யாவின் பிறந்தநாளில் அவர் நடிக்க கமிட்டாகி இருக்கும் படங்கள் பலவற்றின் அப்டேட் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சூர்யா 41 டைட்டில் மற்றம் ஃபர்ஸ்ட்லுக், வாடிவாசல் கிளிம்ப்ஸ் போன்றவற்றை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சூர்யாவின் அடுத்த பட டைரக்டர்
வாடிவாசல் படத்தின் வேலைகள் துவங்குவதில் தாமதம் ஏற்படுவதால், சூர்யா 41 படத்தை முடித்த பிறகு மற்றொரு படத்தில் நடித்து பிறகு, வாடிவாசல் படத்தின் வேலைகளில் சூர்யா இறங்குவார் என கூறப்பட்டது. நேற்று இன்று நாளை, அயலான் படங்களை இயக்கிய டைரக்டர் ரவிக்குமார் இயக்கும் சையின்ஸ் சார்ந்த படத்தில் தான் சூர்யா நடிக்க போகிறார் என ஏற்கனவே தகவல்கள் பரவின.

ஷுட்டிங் எப்போ ஆரம்பம்
ரவிக்குமார் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பது உண்மை தானாம். இந்த படத்தில் சூர்யா சையின்டிஸ்ட் ரோலில் நடிக்க போகிறாராம். ஆனால் ஏற்கனவே சொல்லப்பட்ட தகவலின்படி இந்த படத்தின் ஷுட்டிங், சூர்யா 41 படத்தை முடித்த பிறகு துவங்கப்பட போறதில்லையாம். 2023 ம் ஆண்டு ஜனவரி மாதம் தான் இந்த படத்தின் ஷுட்டிங்கை ஆரம்பிக்க போகிறார்களாம்.
Recommended Video

இப்போவே ஆர்வத்தை தூண்டுறீங்களே
எதிர்கால நிகழ்வுகளை கணிக்கும் சையின்ஸ் அடிப்படையிலான கதையாம் இது. மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷுட்டிங் சென்னையில் தான் நடத்தப்பட உள்ளதாம். கதை உருவாக்க பணிகள் இறுதிக்கட்ட நிலையில் உள்ளதாம். படத்தின் ஹீரோயின் யார் என்பது பற்றிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிதறாம். விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











