லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தெரியும்...லேடி பவர்ஸ்டார் யாருன்னு தெரியுமா?

சென்னை : சூப்பர்ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், பவர்ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் என ஆரம்பத்தில் டாப் நடிகர்களுக்கு தான் பட்டம் கொடுத்து வந்தனர். பிறகு நடிகைகளுக்கும் அப்படி பட்டம் கொடுக்க ஆரம்பித்தனர்.

விஜயசாந்தி, ரம்யா கிருஷ்ணா என பலரையும் லேடி சூப்பர்ஸ்டார் என அழைத்த நிலையில், தற்போது நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டார் என கூப்பிட்டு வருகின்றனர். நயன்தாராவை தவிர தற்போதுள்ள நடிகைகளில் இப்படி ஸ்டார் பட்டம் யாருக்கும் வழங்கப்படவில்லை.

அந்த குறையை தீர்ப்பதற்காக டோலிவுட்டில் இளம் நடிகை ஒருவருக்கு லேடி பவர் ஸ்டார் என பட்டம் வழங்கி உள்ளனர். இது மற்றவர்களை மட்டுமல்ல, அந்த நடிகையையே ஷாக்காக வைத்துள்ளது.

சர்ச்சையில் சிக்கிய சாய் பல்லவி

சர்ச்சையில் சிக்கிய சாய் பல்லவி

தெலுங்கில் ராணா டகுபதி, சாய் பல்லவி நடித்த விரத பர்வம் படம் ஜுன் 17 ம் தேதி ரிலீசானது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ப்ரொமோஷனுக்காக சாய் பல்லவி அளித்த பேட்டியில் அவர் பேசியது, பெரும் சர்ச்சையாக்கப்பட்டது. இதற்காக சாய் பல்லவி மீது பல அமைப்புக்கள் வழக்கும் தொடர்ந்தன.

விளக்கம் அளித்து வீடியோ

விளக்கம் அளித்து வீடியோ

தொடர்ந்து எதிர்ப்புக்கள், கண்டன குரல்கள் அதிகரித்து வந்ததால், நேற்று சமூக வலைதள பக்கங்களில் தான் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் சாய் பல்லவி. இதற்கு பிறகு இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராணா உடன் காதலா

ராணா உடன் காதலா

விரத பர்வம் படத்தால் இந்த சர்ச்சை மட்டுமல்ல, காதல், திருமணம் போன்ற கிசுகிசுக்களிலும் சிக்கி உள்ளார் சாய் பல்லவி. படத்தின் ப்ரொமோஷனுக்காக அனைத்து இடங்களுக்கும் நடிகர் ராணாவுடன் சேர்ந்து செல்வதாலும், அவர்கள் போகும் இடங்களில் சூழ்ந்து கொள்ளும் ரசிகர்களிடம் இருந்து சாய் பல்லவியை ராணா பத்திரமாக அழைத்துச் செல்வது போன்ற போட்டோக்களால் இருவருக்கும் இடையே காதல், விரைவில் திருமணம் என்ற பேச்சுக்கள் பரவின.

சாய் பல்லவிக்காக இன்ட்ரோ வீடியோ

சாய் பல்லவிக்காக இன்ட்ரோ வீடியோ

இப்படி பல சர்ச்சைகளில் சாய் பல்லவி சிக்க காரணமான விரத பர்வம் படத்தில் நக்சலைட் ரோலில் சாய் பல்லவி நடித்துள்ளார். படத்தில் சாய் பல்லவியின் கேரக்டர் பற்றியும், துப்பாக்கி குண்டுகள், போர்களுக்கு நடுவே சாய் பல்லவி எப்படி பிறந்தார் என்பதை காட்டுவதற்காகவும் இன்ட்ரோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டனர்.

லேடி பவர்ஸ்டார்

லேடி பவர்ஸ்டார்

சமீபத்தில் நடத்தப்பட்ட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இந்த வீடியோ வெளியிடப்பட்டது. இதில் சாய் பல்லவியும் கலந்து கொண்டிருந்தார். இதில் இன்ட்ரோ வீடியோவில் சாய் பல்லவியின் பெயர், லேடி பவர்ஸ்டார் என்ற டைட்டிலுடன் திரையிடப்பட்டதை பார்த்து அவரே மிரண்டு போய் விட்டார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி வருகிறது.

இவர் தான் இதற்கு காரணமா

இவர் தான் இதற்கு காரணமா

இப்படி சாய் பல்லவிக்கு முதல் முறையாக டைட்டில் கொடுக்கப்பட்டது இந்த படத்தில் அல்ல. இதற்கு முன் பிப்ரவரி மாதத்தில் ஆடவாலு மீகு ஜோஹார்லு படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சாய் பல்லவி கலந்து கொண்ட போது, ரங்கஸ்தலம் மற்றும் புஷ்பா படங்களை இயக்கிய டைரக்டர் சுகுமார் தான் சாய் பல்லவியை முதல் முறையாக, அவர் லேடி பவன்கல்யாண் என குறிப்பிட்டார்.

Recommended Video

என் life-ல Miracle நடந்திருக்கு|Janani Iyer speech |Filmibeat Tamil
செம வெயிட்டா இருக்கு

செம வெயிட்டா இருக்கு

இதற்கு பிறகு ரசிகர்கள் பலரும் சாய் பல்லவியை லேடி பவர்ஸ்டார் என கூப்பிட துவங்கினர். இதையே சாய் பல்லவிக்கு இன்ட்ரோ டைட்டிலாக கொடுத்தால் படத்தில் அவரின் ரோலுக்கு செம வெயிட்டாக இருக்கும் என நினைத்து தான் படக்குழுவினரும் லேடி பவர்ஸ்டார் சாய் பல்லவி என்றே குறிப்பிட்டுள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X