அப்படி என்ன ஸ்பெஷல்...அப்டேட்டுக்கு ஆகஸ்ட் 20 ஐ குறிவைக்கும் டாப் ஹீரோக்களின் படங்கள்

சென்னை : 2021 ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள் என ஒரு பெரிய லிஸ்டே உள்ளது. இவற்றில் டாப் ஹீரோக்களின் படங்களே அதிகம். சில படங்கள் முடிக்கப்பட்டு ரிலீசுக்காக காத்திருக்கின்றன. மேலும் சில படங்கள் இறுதிக்கட்ட பணிகளில் இருந்து வருகின்றன. இதற்கிடையில் சில ஹீரோக்கள் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று படங்களில் நடித்து வருவதால் அந்த படங்கள் அனைத்துமே அடுத்தடுத்து முடிக்கப்பட்டு, ரிலீசுக்காக தயாராகி வருகின்றன.

ஆனால் இந்த படங்கள் அனைத்துமே தியேட்டரில் தான் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர்கள் உறுதியாக உள்ளதால், இப்போது ஒட்டுமொத்த திரையுலமே தியேட்டர் திறப்பு அறிவிப்பு எப்போது வரும் என காத்திருக்கின்றன. ரஜினி நடிக்கும் அண்ணாத்த படம் தியேட்டர் எப்படியும் திறக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் நவம்பர் 4 ம் தேதி தீபாவளியன்று தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு விட்டது.

டாப் ஹீரோக்களின் படங்களின் டைட்டில், ஃபஸ்ட்லுக், டீசர், டிரைலர். படம் பற்றிய முக்கிய அப்டேட் போன்றவைகளில் அந்த ஹீரோக்களின் பிறந்தநாள் அல்லது டைரக்டரின் பிறந்தநாளில் வெளியிடப்படுவது துற்போது கோலிவுட்டில் ஃபேஷனாகி வருகிறது. அப்படி தான் பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட்லுக் விஜய் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது.

ஆகஸ்ட் 20 ஐ குறிவைக்கும் படங்கள்

ஆகஸ்ட் 20 ஐ குறிவைக்கும் படங்கள்

ஆனால் தியேட்டர் திறக்கப்பட்ட உடன் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால் சில முக்கிய நாட்களை குறிவைத்து அறிவிப்புக்கள் வெளியிடப்படுகின்றன. அப்படி ஆகஸ்ட் 20 ஐ தற்போது டாப் ஹீரோக்களின் படங்கள் குறிவைத்துள்ளன. ஆகஸ்ட் 20 அன்று தான் ரஷ்யாவில் நடக்க உள்ள அஜித்தின் வலிமை படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் துவங்கப்பட உள்ளது. ஏற்கனவே படக்குழு ரஷ்யா சென்று விட்டாலும் ஆகஸ்ட் 20 ல் தான் படப்பிடிப்பை துவங்க போகிறார்களாம்.

சியான் 60 ஃபஸ்ட்லுக்

சியான் 60 ஃபஸ்ட்லுக்

இதைத் தொடர்ந்து விக்ரம், தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கும் சியான் 60 படத்தின் ஃபஸ்ட்லுக்கும் ஆகஸ்ட் 20 அன்று தான் வெளியிடப்பட உள்ளதாக டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் அறிவித்துள்ளார். இந்த படத்தின் ஷுட்டிங் முழுவதும் நிறைவடைந்து விட்டதாக நேற்று அறிவித்த கார்த்திக் சுப்பராஜ், ஆகஸ்ட் 20 ல் ஃபஸ்ட்லுக் மற்றும் அப்டேட் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். அந்த ஃபஸ்ட்லுக்குடன் படத்தின் டைட்டில், ரிலீஸ் தேதி ஆகியன வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாடும் வர வாய்ப்பிருக்கு

மாநாடும் வர வாய்ப்பிருக்கு

இதே போல் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் பாடலும் ஆகஸ்ட் 20 அன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரண்டாவது சிங்கிள் பாடலை யுவன் தயார் செய்து விட்டதாக வெங்கட் பிரபு கூறி இருந்தார்.

அப்படி என்ன ஸ்பெஷல்

அப்படி என்ன ஸ்பெஷல்

அப்படி என்ன ஆகஸ்ட் 20 ல் ஸ்பெஷல் என கேட்கிறீர்களா...வேறு ஒன்றும் இல்லை. இந்துக்களின் சென்டிமென்ட்படி பார்த்தால் அன்று வரலட்சுமி விரதம், ஆவணி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. இதே போல் இஸ்லாமியர்களின் சென்டிமென்ட் படி பார்த்தால் மொஹரம் பண்டிகை. மாநாடு படத்தில் முதல் முறையாக சிம்பு இஸ்லாமிய இளைஞர் ரோலில் நடிப்பதால் இஸ்லாமிய பண்டிகைகளை குறிவைத்தே படத்தின் அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அக்டோபரில் மாநாடு ரிலீசா

அக்டோபரில் மாநாடு ரிலீசா

அப்படி பார்த்தால் மாநாடு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் அன்று வெளியிடப்பட அதிக வாய்ப்புள்ளது. ஏற்கனவே படத்தை ரம்ஜான் அன்று வெளியிடத்தான் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தியேட்டர்கள் மூடல், கொரோனா பரவல் போன்ற காரணங்களால் அது முடியாமல் போனது. தற்போது படத்தை அக்டோபர் மாதம் ஆயுத பூஜைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

வலிமை இறுதிக்கட்ட ஷுட்டிங்

வலிமை இறுதிக்கட்ட ஷுட்டிங்

இதே போல் அஜித்தின் வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் பாடலும் அன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 20 ம் தேதி இரண்டாவது சிங்கிளை வெளியிட்டு, அன்றே படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங்கை துவக்கவும் வாய்ப்புள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X