»   »  படப்பிடிப்பில் நயன்தாராவை பார்த்துவிட்டு குடுகுடுன்னு ஓடிய ரஜினிகாந்த்

படப்பிடிப்பில் நயன்தாராவை பார்த்துவிட்டு குடுகுடுன்னு ஓடிய ரஜினிகாந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தை மக்கள் ஏன் கடவுளாக பார்க்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் கூறியுள்ளார் நயன்தாரா.

சுப்ரீம் ஸ்டார் ஜோடியாக கோலிவுட்டில் அறிமுகமான நயன்தாரா தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ஜோடியானார். இந்த பொண்ணு வந்த வேகத்தில் ரஜினி ஜோடியாகிவிட்டதே என்று வியந்தவர்கள் உண்டு.

இன்றைய தேதிக்கு கோலிவுட்டின் நம்பர் ஒன் ஹீரோயின் நயன்தாரா தான்.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா அறம் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அறம் படத்தை விளம்பரப்படுத்தினார்.

சந்திரமுகி

சந்திரமுகி

சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நயன்தாரா தெரிவித்தார். அவர் பெரிய சூப்பர் ஸ்டார் என்ற பந்தாவே இல்லாதவர் என்றார்.

மேக்கப்

மேக்கப்

படப்பிடிப்பு தளத்தில் முதல் ஆளாக ரெடியாகி வந்துவிடுவார் ரஜினி. சீனியர் அவர் முதல் ஆளாக ரெடியாகிவிடுகிறார் என்று நான் செட் ரெடியானதும் என்னிடம் கூறுமாறு துணை இயக்குனர்களிடம் சொல்லி வைத்தேன் என்று நயன்தாரா தெரிவித்தார்.

கேரவன்

கேரவன்

செட் ரெடியானதும் துணை இயக்குனர்கள் என்னிடம் வந்து முதலில் சொல்ல நான் கேரவனில் இருந்து இறங்கி நடந்து வந்தேன். என்னை பார்த்த ரஜினி சார் சிறு பிள்ளை போன்று குடு குடுவென ஓடி செட்டுக்கு முதலில் சென்றார். அவர் அப்படி செய்யத் தேவையில்லை. அவரின் இந்த பிள்ளை குணத்தால் தான் அவரை மக்கள் கடவுளாக பார்க்கிறார்கள் என்று நயன்தாரா கூறினார்.

English summary
Nayanthara has given the reason as to why people are seeing Rajinikanth as demigod and superstar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil