விஜயகாந்த் தனது மகனுக்கு முதலில் ஏன் சௌக்கத் அலி என பெயர் வைத்தார் தெரியுமா?
சென்னை: நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தற்சமயம் மித்ரன் என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கடைசியாக சுதந்திர தினத்தன்று விஜயகாந்த் தேசியக்கொடி ஏற்றி வைத்து தனது தொண்டர்கள் முன்பு தோன்றினார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ள சண்முக பாண்டியன் பல சுவாரசியமான தகவல்களை கூறியிருக்கிறார்.

சண்முக பாண்டியன்
நடிகர் விஜயகாந்த்திற்கு விஜய பிரபாகர் மற்றும் சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் விஜய பிரபாகர் தேமுதிக கட்சி பொறுப்புகளில் ஈடுபட்டு வருகிறார். இளைய மகன் சண்முக பாண்டியன் மட்டும்தான் நடிகராக இருக்கிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு சகாப்தம் என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழன் என்று சொல் என்ற படத்தில் ஒப்பந்தமானார்.

மதுரை வீரன்
விஜயகாந்தும் நடிக்க வேண்டிய அந்தப் படம் அவரது உடல் நலக்குறைவால் நிறுத்தப்பட்டது. பின்னர் 2018-ஆம் ஆண்டு மதுரை வீரன் என்கிற படத்தில் நடித்திருந்தார். ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கியிருந்தார். அவர் நடிக்க வந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தற்சமயம் மித்ரன் என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சௌக்கத் அலி
விஜயகாந்தினுடைய நெருங்கிய நண்பர் ராவுத்தர் என்பது பலருக்குமே தெரியும். விஜயகாந்த் நடிகராக உயர்வதற்கு முக்கிய பலமாக இருந்தவர் ராவுத்தர்தான். அது மட்டுமின்றி நிறைய இஸ்லாமிய நண்பர்கள் விஜயகாந்திற்கு இருக்கிறார்கள். கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்தபோது தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் மீது ஏற்பட்ட மரியாதையால் தனது முதல் மகனுக்கு விஜய பிரபாகர் என்று பெயர் வைத்தார்.
அதேபோல தனது நண்பர்கள் நிறைய பேர் இஸ்லாமியர்கள் என்பதால் இரண்டாவது மகனுக்கு சௌக்கத் அலி என்ற பெயர் வைக்க வேண்டும் என்ற முடிவு எடுத்திருந்தாராம் விஜயகாந்த்.

சட்ட சிக்கல்
இஸ்லாமிய பெயர் வைப்பதினால் தவறில்லை, ஆனால் பாஸ்போர்ட்டில் இஸ்லாமிய பெயரை வைத்துக் கொண்டு இந்து மதம் என்று குறிப்பிட்டால் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அவருக்கு பிரச்சனை வரும் என்று சிலர் கூற, அப்படியென்றால் வெளிநாட்டிற்கே செல்ல வேண்டாம் இங்கேயே இருக்கட்டும், எனக்கு சாதி, மதம் கிடையாது அதனால் ஒரு முஸ்லிம் பெயரையோ கிறிஸ்தவ பெயரையோ வைப்பதில் என்ன சிக்கல் என்று விஜயகாந்த் கேட்டாராம். இருப்பினும் நடைமுறையில் உள்ள சிக்கல்களை கூறி அவர் மனதை மாற்றியிருக்கிறார்கள் என்று சண்முக பாண்டியன் சண்முக பாண்டியன் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











