Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விக்ரம் விழாவிற்கு வந்த கமலின் உடையில் இதை நீங்க கவனிச்சீங்களா?
சென்னை : விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் அணிந்து வந்த உபெர் கூல் ஜாக்கெட் உடை அனைவரையும் கவர்ந்தது. இந்த உடை பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்,விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான ப்ரொமோஷன் வேலைகள் வேற லெவலில் நடந்து வருகிறது. படத்தின் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறப்படுவது படத்திற்கு பெரிய ப்ரொமோஷனாக அமைந்துள்ளது.
அடுத்த
படங்களில்
பிஸியாகும்
கமல்...கைவிடப்படுகிறதா
இந்தியன்
2
?
விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த விழா நடப்பதற்கு முன்பும் சரி, நடந்து முடிந்த பிறகும் சரி இதை பற்றிய பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை அடுத்தடுத்து ஆச்சரியப்பட வைத்து வருகிறது.

அனைவரையும் கவர்ந்த கமல் உடை
உலக நாயகன் கமல்ஹாசன் 'விக்ரம்' பட டிரைலர் வெளியீட்டு விழாவில் அணிந்து வந்த 'உபெர் கூல் ஜாக்கெட்' உடை அனைவரையும் கவர்ந்தது. அதில் கமல் கம்பீரமாக தோற்றமளித்தார். இந்த ஜாக்கெட் கமலுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஜாக்கெட்டில் இவ்வளவு இருக்கா என அனைவரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

அட இதெல்லாம் கவனிக்கலியோ
இந்த ஜாக்கெட் விக்ரம் திரைப்பட தீமை குறிக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருந்தது. அதுவும் ஜாக்கெட் முழுவதும் படத்தில் பயன்படுத்தப்பட்டது போன்ற துப்பாக்கிகள் உருவம் கையால் வரையப்பட்டுள்ளது. இந்த ஜாக்கெட்டின் பின்புறம் படத்தின் டைட்டிலை குறிக்கும் வகையில் 'V' என்ற எழுத்து சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. இந்த ஜாக்கெட் லெதரால் ஆக்கப்பட்டது.

இவ்வளவு இருக்கா இதில்
படத்தின் தீமான Code Purple கொண்டதாக இந்த ஜாக்கெட் அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் வரும் துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு, கேங்ஸ்டர்கள் என அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்த ஜாக்கெட் அமைக்கப்பட்டுள்ளது. மெட்டலால் அமைக்கப்பட்டுள்ள சிறு துண்டுகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஜிப், பாக்கெட், கிராசான வளையங்கள் ஆகிவையும் இந்த ஜாக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளது.

இவரோட ஐடியா தானா இது
இந்த ஜாக்கெட் அம்ரிதாராம் என்பவரால் டிசைன் செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர் தான் கமலின் ஆடை வடிவமைப்பாளர். கமலுக்கு மட்டுமல்ல அவரது மகள் ஸ்ருதிஹாசனுக்கும் அம்ரிதா ராம் தான் ஆடை வடிவமைப்பாளர். கமலின் ஜாக்கெட் பற்றிய தகவல் வெளியானதில் இருந்தே கமலின் ஸ்டையிலான போட்டோ செம டிரெண்டாகி வருகிறது.