அஜித் எப்போ ரிட்டர்ன்...அடுத்து ஏகே 61 ஷுட்டிங் நடக்கும் இடம் இதுதான்...தீயாய் பரவும் போட்டோஸ்
சென்னை: அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து இந்த படத்தையும் போனி கபுர் தான் தயாரித்து வருகிறார்.
வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட இந்த படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில், ஏப்ரல் மாதம் துவங்கி நடந்து வருகிறது. அங்கு மவுண்ட் ரோடு வங்கிக் கிளை போல் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் முதல் கட்ட ஷுட்டிங் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்தது.
இதைத் தொடர்ந்து புனேயில் இரண்டாம் கட்ட ஷுட்டிங் துவங்கப்படும், ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் ஷுட்டிங் முழுவதும் முடிக்கப்பட்டு, செப்டம்பரில் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து, தீபாவளிக்கு படம் ரிலீஸ் என முதலில் சொல்லப்பட்டது.

தள்ளி போகும் ஏகே 61 ரிலீஸ்
ஆனால் முதல் கட்ட ஷுட்டிங் முடிந்ததும் அஜித் கிளம்பி ஐரோப்பாவில் பைக் டுர் சென்று விட்டார். கடந்த ஒரு மாதமாக அஜித் ஜாலியாக ஐரோப்பா நாடுகளில் ஊர் சுற்றும் போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகி செம டிரெண்டாகி, இணையத்தை கலக்கி வருகிறது. ஆனால் படத்தை முடிக்காமல் அஜித் இப்படி டுர் சென்றுள்ளதும், ஏகே 61 ரிலீஸ் தேதி டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதும் அஜித் ரசிகர்களை கவலை அடைய வைத்தது.

புதிய கெட்அப்பிற்கு மாறுகிறார் அஜித் ஆனால் சமீபத்தில் வெளியான தகவலின்படி, ஏகே 61 படத்தில் அஜித் இரண்டு கெட்அப்களில் நடிக்க உள்ளதால், வயதான கெட்அப்பில் இருக்கும் படத்தின் சீன்களில் நடித்து முடித்து விட்டாராம். அதனால் அதே லுக்கில் டுர் கிளம்பி விட்டாராம். இனி திரும்பி வந்ததும், மற்றொரு புதிய லுக்கிற்கு அஜித் மாற போகிறாராம். இந்த லுக்கில் தான் க்ளைமாக்சில் அஜித் வர போகிறாராம். இதனால் இதை சஸ்பென்சாக வைக்கத் தான், வழக்கத்திற்கு மாறாக ஷுட்டிங்கிற்கு இடையே டுர் போய் உள்ளாராம்.
ஆனால் சமீபத்தில் வெளியான தகவலின்படி, ஏகே 61 படத்தில் அஜித் இரண்டு கெட்அப்களில் நடிக்க உள்ளதால், வயதான கெட்அப்பில் இருக்கும் படத்தின் சீன்களில் நடித்து முடித்து விட்டாராம். அதனால் அதே லுக்கில் டுர் கிளம்பி விட்டாராம். இனி திரும்பி வந்ததும், மற்றொரு புதிய லுக்கிற்கு அஜித் மாற போகிறாராம். இந்த லுக்கில் தான் க்ளைமாக்சில் அஜித் வர போகிறாராம். இதனால் இதை சஸ்பென்சாக வைக்கத் தான், வழக்கத்திற்கு மாறாக ஷுட்டிங்கிற்கு இடையே டுர் போய் உள்ளாராம்.

புனே ஷுட்டிங் முடிச்சுட்டாங்களா
ஏகே 61 படத்தில் ஏற்கனவே 60 சதவீதம் ஷுட்டிங் முடிக்கப்பட்டு விட்டதாம். அஜித் திரும்பி வந்த பிறகு புனேயில் ஷுட்டிங்கை துவக்க போவதாக சொன்னார்கள். ஆனால் அது உண்மை கிடையாதாம். அஜித் தவிர மற்றவர்கள் நடிக்கும் காட்சிகள் தான் புனேயில் படமாக்கப்பட்டதாம். இதில் மஞ்சுவாரியரும் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

அடுத்த கட்ட ஷுட்டிங் இங்கேயா
லேட்டஸ்ட் தகவலின்படி, லண்டனில் இருந்து இன்னும் ஒரு வாரத்தில் அஜித் இந்தியா திரும்ப உள்ளாராம்.அஜித் திரும்பி வந்ததும் புதிய கெட்அப்பிற்கு மாற போகிறாராம். அடுத்த கட்ட ஷுட்டிங் புனேவில் இல்லையாம். ஏகே 61 அடுத்த கட்ட ஷுட்டிங் சென்னையில் நடக்க போகிறதாம். வடசென்னையில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். வடசென்னையில் டைரக்டர் வினோத் ஷுட்டிங் ஏற்பாடுகளை செய்து வரும் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
Recommended Video

இது தான் அஜித்தின் பிளானா
ஆகஸ்ட் மாதத்தில் ஏகே ஷுட்டிங் முழுவதும் முடிக்கப்பட்டு விடும் என குறப்படுகிறது. அதற்கு பிறகு அஜித் டப்பிங் வேலைகளில் இறங்க போகிறாராம். இதை முடித்து விட்டு, ஏகே 62 படத்திற்காக தயாராக போகிறாராம் அஜித்.இதனால் ஏகே 61, ஏகே 62 படங்கள் மிக குறைந்த இடைவேளையில் ரிலீஸ் செய்யப்படக் குட வாய்ப்புள்ளதாக குறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











