Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எக்ஸ் மனைவிகளுடன் அப்படியொரு போஸ் கொடுத்த அனுராக் காஷ்யப்.. பட புரமோஷனுக்காக என நெட்டிசன்கள் கலாய்!
மும்பை: இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிகை டாப்ஸி நடித்துள்ள டோபாரா படம் வரும் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், தனது எக்ஸ் மனைவிகளான ஆர்த்தி பஜாஜ் மற்றும் கல்கி கோச்சலின் எடுத்தக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி இவர்கள் இருவரும் என் இரு தூண்கள் என பதிவிட்டுள்ள அனுராக் காஷ்யப்பிடம் அப்புறம் ஏன் விவகாரத்து செய்தீர்கள் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
சேனாபதி
ஆன்
தி
வே..
அடுத்த
வாரத்தில்
துவங்குகிறதா
இந்தியன்
2
படம்?..
கமல்
கொடுத்த
ஹின்ட்!

டாப்ஸி படம்
நடிகை டாப்ஸி நடிப்பில் பாலிவுட்டில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான சபாஷ் மித்து உள்ளிட்ட படங்கள் சரியாக போகவில்லை. இந்நிலையில், இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் அவர் நடித்துள்ள டோபாரா படத்தை பெரிதும் நம்பி தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளனர். வரும் ஆகஸ்ட் 19ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், புரமோஷன் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

பத்திரிகையாளர்களுடன் பஞ்சாயத்து
கடந்த வாரம் டோபாரா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை டாப்ஸி பத்திரிகையாளர்களை பார்த்து மரியாதையா பேசு என்றும், லேட்டா வந்தேன்னு எப்படி கேட்ப என்றும் பேசியது பெரும் பஞ்சாயத்தாக மாறியது. மேலும், தங்களின் டோபாரா படத்தை பாய்காட் செய்யுங்கள் என நெட்டிசன்களுக்கு கோரிக்கையும் வைத்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. அப்படியாவது நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைக்கும் என பல வழிகளில் முயற்சி செய்தும் ஒன்றும் பலனளிக்கவில்லை.

எக்ஸ் மனைவிகளுடன்
இந்நிலையில், இயக்குநர் அனுராக் கஷ்யப் தனது முன்னாள் மனைவிகளான ஆர்த்தி பஜாஜ் மற்றும் கல்கி கோச்சலின் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புதிய போட்டோவை ஷேர் செய்து, இவர்கள் இருவரும் எனது இரு தூண்கள் என போஸ்ட் போட்டுள்ளார். ஆர்த்தி பஜாஜை 1997ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அனுராக் கஷ்யப் 2009ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். பின்னர் 2011ம் ஆண்டு நடிகை கல்கி கோச்சலினை திருமணம் செய்து கொண்ட அனுராக் காஷ்யப் 2015ல் அவரை விவாகரத்து செய்தார்.

நெட்டிசன்கள் கலாய்
டோபாரா படத்தின் புரமோஷனுக்காக 2 முன்னாள் மனைவிகளையும் அழைத்து வந்து போட்டோ எடுத்து புரமோஷன் பண்றீங்களா அனுராக் காஷ்யப் என்றும் இரு தூண்கள் என்றால் பின்னர் ஏன் அந்த இருவரையும் விவாகரத்து செய்தீர்கள் என்றும் இனிமேல் ஒரே வீட்டில் இரு மனைவிகளுடன் வாழப் போகிறீர்களா? என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து விளாசி வருகின்றனர்.

பாலிவுட் படங்கள் பிடிக்காது
பாலிவுட்டில் படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் அனுராக் கஷ்யப் ரசிகர்களை கவர தனக்கும் பாலிவுட் படங்கள் பிடிக்காது என்றும், தமிழ் மற்றும் மலையாளப் படங்களைத் தான் தற்போது விரும்பிப் பார்ப்பதாகவும் பேசி உள்ளார். மேலும், பாய்காட் டிரெண்டிங்கிற்கு பின்னால் பெரிய சதி இருப்பதாகவும் கூறியது பரபரப்பை கிளப்பி உள்ளது.