பிசாசு 2ல் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் பெயர் இதுதான்!

சென்னை : தொடர்ந்து டார்க் ஜானரில் படங்களை இயக்கி வெற்றி பெற்று வருபவர் இயக்குனர் மிஷ்கின்

பிசாசு படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாவது பாகத்தை தற்போது இயக்கி வருகிறார்

பிசாசு இரண்டில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வர அவரது கதாபாத்திரத்தின் பெயரை மிஷ்கின் வெளிப்படுத்தியுள்ளார்.

கைகளுக்கும் கால்களுக்கும் முக்கியத்துவம்

கைகளுக்கும் கால்களுக்கும் முக்கியத்துவம்

இயக்குனர் மிஷ்கின் திரைப்படங்கள் என்றாலே மிகவும் வித்தியாசமாக இருக்கும் பெரிதாக கமர்ஷியல் எலிமெண்ட்கள் எதுவும் இருக்காது. அதிகமான மசாலாக்கள் இருக்காது பஞ்ச் வசனங்கள் இருக்காது. கைகளுக்கும் கால்களுக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து இவரது திரைப்படங்கள் இருக்கும். அதனாலேயே மிஷ்கின் திரைப்படங்கள் என்றாலே டார்க் ஜானரில் இருக்கும் அதுவே இவரைத் தனித்துவமான இயக்குனராக காட்டுகிறது .

மாறுபட்ட பேய் படமாக

மாறுபட்ட பேய் படமாக

மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது அந்த வகையில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு.இதுவரை தமிழ் சினிமாவில் பல பேய் படங்கள் வெளியாகியிருந்தாலும் பிசாசு அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பேய் படமாக வெளியானது.

பேய்கள் தேவதைகள்

பேய்கள் தேவதைகள்

அனைவரும் பேயை மிகவும் கொடூரமாக காட்டிக் கொண்டிருந்த வேளையில் பேய்களுக்கும் உணர்வு உண்டு பேய்கள் சாத்தான்கள் அல்ல அவை தேவதைகள் என புதிய கோணத்தில் பேயை காட்டியிருந்தது ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்தது மட்டுமல்லாமல் பிசாசு படத்தை ரசிகர்கள் கொண்டாடினர் இப்படியும் ஒரு பேய் படத்தை கொடுக்க முடியுமா என பலரும் ஆச்சரியமாக பார்த்தனர்

பிசாசு படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து இப்பொழுது பிசாசு பாகம்-2 உருவாகி வருகிறது பிசாசு 2ல் நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆண்ட்ரியாவை தொடர்ந்து பூர்ணா, விஜய் சேதுபதி, சந்தோஷ் பிரதாப்,அஜ்மல் என பலரும் இதில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்

விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயர்

விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயர்

குறிப்பாக விஜய் சேதுபதி இதில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். மிகக் குறைந்த காட்சிகளில் மட்டுமே வந்து சென்றாலும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் நின்று பேசும் அளவிற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிசாசு 2ல் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயர் " டாக்டர் ஜான் " என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இயக்குனர் மிஷ்கின் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X