twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புக்கிங்கில் சாதனை படைத்த டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்!

    |

    சென்னை : உலகளவில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ். வரும் மே மாதம் 6ம் தேதி இந்தப் படம் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ள நிலையில் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் ரிலீசாக உள்ளது.

    விஜய்யை பங்களாக கலாய்த்த விக்னேஷ் சிவன்... கடும் கோபத்தில் விஜய் ரசிகர்கள் விஜய்யை பங்களாக கலாய்த்த விக்னேஷ் சிவன்... கடும் கோபத்தில் விஜய் ரசிகர்கள்

    8 நாளில் ரிலீஸ்

    8 நாளில் ரிலீஸ்

    சர்வதேச அளவில் இன்னும் 8 நாட்களில் ரிலீசாக உள்ளது டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ். இந்தப் படம் இந்தியாவில் ரிலீசுக்கு முன்பே 10 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்திய பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் படம் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    5 மொழிகளில் ரிலீஸ்

    5 மொழிகளில் ரிலீஸ்

    படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் வரும் மே மாதம் 6ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக ஒரு மாதத்திற்கு முன்னதாகவே படத்தின் முன்பதிவு துவங்கப்பட்ட நிலையில், படம் முன்பதிவிலேயே 10 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது.

    முன்பதிவில் சாதனை

    முன்பதிவில் சாதனை

    உலக திரை வரலாற்றில் ஒவ்வொரு முறை பாக்ஸ் ஆபீஸ் சாதனை முறியடிக்கப்படும் போதும் அதில் மார்வல் திரையுலகின் திரைப்படம் இருக்கும். அதுபோலவே தற்போது இந்தப் படத்தின் முன்பதிவு இந்தியாவில் சாதனை புரிந்துள்ளது. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தின் இரண்டாவது பாகமாக வெளியாகவுள்ள இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

    ஒரு மாதத்திற்கு முன்னதாக புக்கிங்

    ஒரு மாதத்திற்கு முன்னதாக புக்கிங்

    பிரம்மாண்டமான அளவில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப் படம் முதல் முறையாக ஒரு மாதத்திற்கு முன்னதாக தன்னுடைய புக்கிங்கை துவங்கி வசூலிலும் சாதனை புரிந்துள்ளது. ஹாலிவுட் திரைப்படத்தில் இப்படியொரு அட்வான்ஸ் முன்பதிவு செய்வது இதுவே முதல்முறை.

    விரைவில் ஹவுஸ்புல் ஆகும்

    விரைவில் ஹவுஸ்புல் ஆகும்

    இதனிடையே மார்வல் படங்கள் எப்போதும் இந்திய பாக்ஸ் ஆபிசில் ஒரு மேஜிக்கை நிகழ்த்தும் என்றும் ஒரு மாதத்திற்கு முந்தைய இந்த அட்வான்ஸ் புக்கிங் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் விரைவில் இந்தியாவில் அனைத்து ஷோக்களும் ஹவுஸ்பில் ஆகிவிடும் என்றும் பிவிஆர் பிக்சர்ஸ் சிஇஓ கமல் ஜியான்சந்தினி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    400 திரையரங்குகளில் ரிலீஸ்

    400 திரையரங்குகளில் ரிலீஸ்

    இந்தப் படம் இந்திய அளவில் 400 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இறுதியாக அவெஞ்சர் எண்ட் கேம் படத்திற்கு பெரிய வரவேற்பு இருந்த நிலையில் தற்போது டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ் படத்திற்கும் சிறப்பாக வரவேற்பு காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    சிறிய திரையரங்குகளில் வரவேற்பு

    சிறிய திரையரங்குகளில் வரவேற்பு

    ஐநாக்ஸ் திரையரங்குகளில் முன்பதிவு சிறப்பாக உள்ள நிலையில், சிறிய திரையரங்குகளிலும் படத்திற்கான எதிர்பார்ப்பு மற்றும் முன்பதிவு சிறப்பாக காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மார்வெல் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் காணப்படும் வரவேற்பு இதை காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Doctor strange in the Multiverse of Madness movie collects Rs 10 crores in booking
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X