Don't Miss!
- News
சாதிய பாகுபாடு.. தேசிய கொடியேற்ற விடாமல் பட்டியலின ஊராட்சி தலைவரை தடுத்த கும்பல்.. போலீசில் புகார்!
- Finance
மாதம் 8000 சம்பளம் வாங்கியவர், தினமும் 6 கோடி சம்பாதிக்கிறார்.. யார் இந்த நிதின்..!
- Sports
கே.எல்.ராகுலை தொடர்ந்து அக்ஷர் பட்டேல்.. சைலண்ட்டாக நடந்து வரும் திருமணம்.. யார்? யார்? பங்கேற்பு
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
10 வலிமை, 14 பீஸ்ட் ஒரே படத்திலா...மிரள வைத்த Doctor Strange in the Multiverse of Madness சாதனை
சென்னை : ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த Doctor Strange in the Multiverse of Madness டிரைலர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமே மிரண்டு போய் உள்ளது.
அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள், டிரைலர் யாருடையது அதிக பார்வைகளை பெற்று சாதனை படைக்கும். எது மிரட்டலாக இருக்கும் என இந்திய ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கையில், வலிமை, பீஸ்ட் படங்களின் சாதனையை அசால்டாக தூக்கி சாப்பிட்டுள்ளது Doctor Strange in the Multiverse of Madness பட டிரைலர்.
தனுஷின் திருச்சிற்றலம்பம் படம் என்ன ஆச்சு...ஹாட் அப்டேட் கொடுத்த டைரக்டர்

Doctor Strange பார்ட் 2
Marvel Studios தயாரித்துள்ள இந்த படத்தில் Benedict Cumberbarch, Elizabeth Olsen, Xochiti Gomez உள்ளிட்ட பல நடித்துள்ளனர். 2016 ம் ஆண்டு வெளிவந்த Doctor Strange படத்தின் அடுத்த பாகமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. Dr Strange மற்றும் அவரது கூட்டாளிகள் மர்மமான திகில் உலகில் சந்திக்கும் பிரச்சனைகள், ஆச்சரியங்கள் தான் இந்த படத்தின் கதை.

மிரள வைத்த டிரைலர்
காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டிரைலர் நேற்று காலை வெளியிடப்பட்டது. Doctor Strange in the Multiverse of Madness படம் இந்தியாவில் ஆறு மொழிகளில் மே 6 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சூப்பர்ஹீரோ படமான இந்த படம் சாம் ராய்மி இயக்கிய Marvel காமிக் கேரக்டரான Doctor Strange ஐ மையமாக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

6 மொழிகளில் ரிலீஸ்
ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 6 மொழிகளில் இந்தியாவில் மே 6 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ள இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியிடப்பட்ட 3 மணி நேரத்தில் கிட்டதட்ட 11 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது இந்த படத்தின் டிரைலர். 16 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
Recommended Video

லைக்குகளை குவித்த ரசிகர்கள்
அனல் பறக்கும் ஆக்ஷன், கிராஃபிக்ஸ், பிரம்மாண்டம் என நொடிக்கு நொடிக்கு பிரம்மிக்க வைத்துள்ளார்கள். இந்த டிரைலரை பார்த்து விட்டு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். இதில் பறக்கும் கேரக்டராக நடித்துள்ள Tom Cruise, Iron Man கேரக்டரை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.