டாக்டர் டிரைலர் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் டாக்டர்.

மருத்துவ மாஃபியாக்கள் பற்றிய திரைப்படமாக உருவாகியுள்ள டாக்டர் வரும் அக்டோபர் 9ம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு இப்பொழுது வெளியிட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

இரண்டாவது படமாக டாக்டர்

இரண்டாவது படமாக டாக்டர்

இதுவரை கலகலப்பான திரைப்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் இப்போது டாக்டர் என்ற படத்தில் மிகவும் சீரியசான கதையில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். நெல்சன் ஏற்கனவே நயன்தாரா,யோகி பாபு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். இப்பொழுது இரண்டாவது படமாக டாக்டர் படத்தை இயக்கியுள்ளார்.

மருத்துவ மாஃபியாக்கள்

மருத்துவ மாஃபியாக்கள்

மருத்துவத் துறையில் இருக்கும் மருத்துவ மாஃபியாக்கள் பற்றிய திரைப்படமாக உருவாகியுள்ள டாக்டர் ரிலீஸுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகியும் பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது. இந்த நிலையில் இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அக்டோபர் 9ஆம் தேதி ரிலீஸ்

அக்டோபர் 9ஆம் தேதி ரிலீஸ்

இந்த நிலையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இப்படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகிறது. அதன்படி அக்டோபர் 9ஆம் தேதி டாக்டர் திரையரங்குகளில் வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்த இருக்க, விஜே அர்ச்சனா, தீபா,யோகி பாபு, வினய் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

டிரைலர் அப்டேட்

டிரைலர் அப்டேட்

சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். டாக்டர் படத்திற்கு கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வர இப்பொழுது டிரைலர் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

 விரைவில் வெளியாகிறது

விரைவில் வெளியாகிறது

இப்படத்திற்கு நிர்மல் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது அவர் டாக்டர் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இன்னும் ஓரிரு தினங்களில் டாக்டர் டிரைலர் வெளியாக இருக்க இந்தப் படம் தெலுங்கில் வருண் டாக்டர் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X