»   »  நம்ம பல்லாள தேவனுக்கு போதைப் பொருள் பழக்கமா?: தந்தை விளக்கம்

நம்ம பல்லாள தேவனுக்கு போதைப் பொருள் பழக்கமா?: தந்தை விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தனது மகன்கள் ராணாவுக்கோ, அபிராமுக்கோ போதைப் பொருள் பழக்கம் இல்லை என்று பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபு டக்குபாட்டி தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக தெலுங்கு நடிகர்கள் ரவி தேஜா, நவ்தீப், தனிஷ், நடிகைகள் சார்மி கவுர், முமைத் கான் உள்ளிட்ட 15 பேருக்கு தெலுங்கானா போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

Does Rana use drugs?: His Dad clears air

பாகுபலி படத்தில் பல்லாள தேவனாக நடித்த ராணாவுக்கும் போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதாக பேசப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து ராணாவின் தந்தையும், பிரபல தெலுங்கு தயாரிப்பாளருமான சுரேஷ் பாபு டக்குபாட்டி கூறியிருப்பதாவது,

என் மகன்கள் ராணா மற்றும் அபிராமுக்கும் போதைப் பொருள் கும்பலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்கள் குடும்பத்து பெயரைக் கெடுக்கவே சிலர் என் மகன்களை தேவையில்லாமல் இந்த விஷயத்தில் கோர்த்துவிடுகிறார்கள்.

போதைப் பொருள் விஷயத்தில் எங்கள் குடும்பத்தை சேர்ந்த யாருக்கும் நோட்டீஸ் வரவில்லை. வதந்தி பரப்புவதை நிறுத்திக் கொண்டால் நல்லது என்றார்.

English summary
Popular Telugu producer Suresh Babu Daggubati said that his sons Rana and Abhiram has nothing to do with the drugs scandal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil