»   »  கூட்டத்தைப் பார்த்தா மயங்கி விழுந்துடுவாரா இந்த நடிகை?

கூட்டத்தைப் பார்த்தா மயங்கி விழுந்துடுவாரா இந்த நடிகை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லூர் : சமீபத்தில் வெளியாகி செமையாக ஓடிக் கொண்டிருக்கும் தெலுங்குப் படம் 'அர்ஜுன் ரெட்டி'. இந்த ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு வந்திருக்கிறார் ஷாலினி பாண்டே. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் லிப்லாக் காட்சிகளிலும் நடித்திருக்கிறார் ஷாலினி.

தெலுங்கு தேச மக்கள் ஷாலினியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதனையடுத்து தமிழ், கன்னட மொழிகளிலும் நடிக்க ஷாலினிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

Does the actress falls unconscious in the crowd?

இந்த நிலையில் ஷாலினி பாண்டே, ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஒரு செல்போன் கடையை திறந்து வைக்கச் சென்றுள்ளார். ஷாலினி வருவதை அறிந்து அங்கு ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தார்கள்.

Does the actress falls unconscious in the crowd?

ஏற்கெனவே சற்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஷாலினி தன்னைப் பார்க்க வந்த கூட்டத்தைப் பார்த்து மயங்கி விழுந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்போன் கடை உரிமையாளர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரம் மருத்துவமனையிலேய ஓய்வெடுத்த ஷாலினி, அதன் பிறகு திறப்பு விழாவில் கலந்துகொண்டு பிறகு ஐதராபாத் திரும்பியிருக்கிறார்.

English summary
'Arjun Reddy' is a recently released Telugu film. After that, heroine Shalini pandey is getting ready to act in Tamil and Kannada films. She went to the opening ceremony of a cellphone shop at Nellore and fell unconscious.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil