Don't Miss!
- Sports
U-19 மகளிர் உலக கோப்பை- 59 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்திய அணி அபார வெற்றி
- News
ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி.. முதல்வர் அறிவிப்பு
- Finance
Budget 2023:பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்..!
- Automobiles
டாடா எலெக்ட்ரிக் கார்களின் கதையை முடிக்க போகுது! மிகவும் விலை குறைவான மாடலுக்கு புக்கிங் தொடக்கம்!
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் பிப்ரவரி 15 வரை இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கும்...
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
கடைசி நேரத்தில் கழட்டிவிட்ட ரஜினிகாந்த்.. கார்த்தியிடம் தஞ்சம் புகுந்த ‘டான்’ பட இயக்குநர்?
சென்னை: சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய இயக்குநர் சிபி சக்கரவர்த்தி நடிகர் கார்த்திக்கு ஒரு கதை சொல்லி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான டான் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது.
அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி நடிகர் ரஜினிகாந்தை வைத்து படம் பண்ணப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசியில் அந்த படம் கைகூடவில்லை என்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் கோடம்பாக்கத்தில் வலம் வருகின்றன.
சிவ கார்த்திகேயனின் டான் படம் பார்த்தபோது முதலில் சிரிப்பு வரவில்லை... உதயநிதி வெளிப்படையான பேச்சு

டான் இயக்குநர்
சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் மூலம் இந்த ஆண்டு இயக்குநராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படம் எப்படி 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் சாதனை செய்ததோ அதே அளவுக்கு இந்த படமும் 100 கோடி கிளப்பில் இணைந்தது. சமுத்திரகனியையும் சிவகார்த்திகேயனையும் வைத்து அப்பா சென்டிமென்ட்டில் ரசிகர்கள் நெஞ்சில் இடம் பிடித்து விட்டார் சிபி சக்கரவர்த்தி.

ரஜினி படம்
முதல் படமே தூள் கிளப்பிய நிலையில், உடனடியாக லைகா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு படம் பண்ணும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததாக தகவல்கள் வெளியாகின. சிபி சக்கரவர்த்தி சொன்ன ஸ்க்ரிப்ட் ரஜினிக்கு ரொம்ப பிடித்துப் போக லைகா தயாரிப்பில் அந்த படத்திற்கான வேலைகள் வேகமாக நடைபெற்றன.

கடைசில பிடிக்கல
சிபி சக்கரவர்த்தி சொன்ன ஸ்டோரி பிடித்த நிலையில், சமீபத்தில் அவர் உருவாக்கி இருந்த முழு ஸ்க்ரிப்ட்டையும் படித்துப் பார்த்த ரஜினிக்கு அது செட் ஆகும் என தோணவில்லையாம். உடனடியாக வேண்டாம் என சொல்லவும் வேறு ஒரு இயக்குநரை லைகா நிறுவனம் தேடிப்பிடித்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

லண்டனில் பிரதீப் ரங்கநாதன்
லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு தற்போது லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் வசம் சென்றுள்ளதாகவும் அதற்காகத்தான் அவர் லண்டனுக்கு சென்றுள்ளார் என்றும் பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

கார்த்தியிடம் தஞ்சம்
இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான ஹீரோ வேட்டையில் சிபி சக்கரவர்த்தியும் இறங்கி விட்டாராம். தீவுத் திடலில் ஜப்பான் படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் நடிகர் கார்த்தியிடம் ரஜினிக்காக தயார் செய்து வைத்த அதே கதையை சொல்லி உள்ளதாகவும் விரைவில் அவரது ஃபீட்பேக் வரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.