»   »  கடவுள் மாதிரி நடக்காதீங்க: அடிவாங்கிய நடிகர் 'தலைக்கனம்' நடிகருக்கு குட்டு

கடவுள் மாதிரி நடக்காதீங்க: அடிவாங்கிய நடிகர் 'தலைக்கனம்' நடிகருக்கு குட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கடவுள் போன்று நினைத்துக் கொண்டு நடக்க வேண்டாம் என நடிகர் சுனில் குரோவர் தன்னை தாக்கிய நடிகர் கபில் சர்மாவிடம் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் கபில் சர்மா ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்தபோது சக நடிகரான சுனில் குரோவரை அசிங்கமாகத் திட்டி தாக்கினார்.

அவர் குடிபோதையில் சுனிலை அடித்தார். இது குறித்து சுனில் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

காயம்

காயம்

பாஜி, நீங்கள் என்னை காயப்படுத்திவிட்டீர்கள். உங்களுடன் பணியாற்றியதன் மூலம் நான் பலவற்றை கற்றுக் கொண்டேன். ஒரேயொரு அறிவுரை கூற விரும்புகிறேன். விலங்குகள் போக மனிதர்களையும் மதிக்கத் துவங்குங்கள்.

மதிப்பு

மதிப்பு

அனைவரும் உங்களை போன்று வெற்றிகரமாக இல்லை. அனைவருமே உங்களை போன்றே வெற்றிகரமாக இருந்தால் உங்களை யார் மதிப்பார்கள். அதனால் அடுத்தவர்களையும் மதியுங்கள்.

அவமதிப்பு

அவமதிப்பு

யாராவது உங்களை திருத்தினால் அவரை திட்டாதீர்கள். சக பயணிகள் அதிலும் சம்பந்தம் இல்லாத பெண்கள் முன்பு கெட்ட வார்த்தை பேசுவதை தவிர்த்துவிடுங்கள்.

ஷோ

ஷோ

இது உங்களின் ஷோ(தி கபில் சர்மா ஷோ) என்பதையும், நீங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம் என்பதையும் எனக்கு புரிய வைத்ததற்கு நன்றி.

கடவுள்

கடவுள்

இந்த துறையில் நீங்கள் தான் சிறந்தவர். ஆனால் அதற்காக கடவுள் போன்று நடந்து கொள்ளாதீர்கள். நீங்கள் மேன்மேலும் வெற்றியும், புகழும் பெற வாழ்த்துகிறேன் என சுனில் தெரிவித்துள்ளார்.

English summary
Actor Sunil Grover has asked actor Kapil Sharma not to act like God. Kapil assaulted Sunil on a flight under the influence of alcohol.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil