»   »  நடிகர் சங்கத்தை பிரிப்பதாக கமல் ஹாஸன் மீது குற்றம் சாட்டுவதா? - விஷால்

நடிகர் சங்கத்தை பிரிப்பதாக கமல் ஹாஸன் மீது குற்றம் சாட்டுவதா? - விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத்தை பிரிக்கப் பார்ப்பதாக கமல் ஹாஸன் மீது குற்றம் சாட்டுவது தவறு என்று விஷால் கூறியுள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும விஷால், தங்கள் அணிக்கு கமல் ஹாஸன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளதற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு குறித்துப் பேசினார்.

"நடிகர் சங்க தேர்தலில் அனைவரும் வந்து ஓட்டு போட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காகவே அனைவரையும் சந்தித்து ஓட்டு போட வரும்படி வற்புறுத்தி வருகிறோம். ரஜினி சார், கமல் சார் என அனைவரையும் அதற்காகத்தான் பார்த்தோம்.

Don't blame our legend Kamal, says Vishal

நாடக நடிகர்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி இருக்கிறார்கள். அவர்கள் யாரையும் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க மாட்டோம். அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்து உதவி செய்வோம்.

கமலஹாசன் தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே முக்கியமானவர். அவரைச் சந்தித்து ஆதரவு கேட்டோம். அதை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார். நடிகர் சங்கத்தை அவர் பிரிக்கப் பார்ப்பதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு. அவரை யாரும் விமர்சிப்பதை ஏற்க முடியாது.

விஜயகாந்த் சாரையும் சந்தித்தோம். ஓட்டுப்போட வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். நிச்சயம் வருவதாக கூறினார். நல்லவர்களுக்கு ஓட்டுப்போடுவேன் என்று சொல்லி இருக்கிறார். நான் அவருடைய ரசிகன். அவர் யாருக்கு ஓட்டுப் போடுவார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.

வரும் 18-ம் தேதி படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அனைவரையும் ஓட்டுப்போட வற்புறுத்தி வருகிறோம்," என்றார்.

English summary
Actor Vishal says that Kamal Hassan never tries to divide Nadigar Sangam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil