இனி சார்ன்னு கூப்பிட வேண்டாம்… விஜய்ண்ணா ரூட்டில் அஜித்ண்ணா… AK-வின் ஸ்கெட்ச் யாருக்கு?

சென்னை: அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

அதுமட்டும் இல்லாமல் என்றுமே வெளியே தலை காட்டாத அஜித், இப்போதெல்லாம் செல்லும் இடங்களில் ரசிகர்களுடன் போட்டோ எடுத்து அவர்களுக்கு சர்ஃப்ரைஸ் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், துணிவு ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தை சந்தித்த ரசிகர்களிடம் அவர் சொன்ன அட்வைஸ் வைரலாகி வருகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் துணிவு

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் துணிவு

அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். முக்கியமாக விஜய்யின் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் அஜித் ரசிகர்கள் துணிவு படத்தை பயங்கரமாக ப்ரோமோட் செய்து வருகின்றனர். எப்போதும் மீடியா வெளிச்சம் படாமல் இருக்கும் அஜித், இப்போதெல்லாம் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்களுடன் போட்டோ எடுத்து வருகிறார். இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கு அஜித்தின் அன்பு கட்டளை

ரசிகர்களுக்கு அஜித்தின் அன்பு கட்டளை

அதேபோல், அஜித் தனது ரசிகர்களை சந்திப்பதே அரிதாக இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக அவர்களை அடிக்கடி சந்தித்து வருகிறார். அஜித் பைக்கிலோ அல்லது காரிலோ செல்லும் போது அவரை ரசிகர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அப்படியெல்லாம் என்னை யாரும் ஃபாலோ செய்ய வேண்டாம், நீங்கள் பத்திரமாக இருக்க வேண்டும் என அஜித் சமீபத்தில் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருந்தது வைரலானது. அதேபோல், அடுத்து ஒரு ரசிகரின் முகநூல் பதிவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சார்ன்னு கூப்பிட வேண்டாம்

சார்ன்னு கூப்பிட வேண்டாம்

துணிவு படத்தில் இடம்பெறும் ராப் சாங் ஒன்றின் சூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தை சந்திப்பதற்காக டான்ஸர்கள் காத்திருந்துள்ளனர். அவர்களிடம் "ஏன் நின்னுட்டே இருக்கீங்க இப்போதான ஷூட்டிங் முடிச்சிட்டு வர்றீங்க, அதனால உக்கார்ந்து ரெஸ்ட் எடுங்க" என தோளில் கை வைத்து அஜித் கூறியுள்ளாராம். அதற்கு ஓக்கே சார் என கூறிய ரசிகரிடம், "இனி சார்ன்னு எல்லாம் கூப்ட வேண்டாம், அண்ணன் என சொன்னாலே போதும்" என அஜித் அன்பு கட்டளையிட்டுள்ளார். இதனை எதிர்பார்க்காத அந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைக்க, அவர்களை பார்த்து சிரித்தபடியே அஜித் கடந்து சென்றாராம். இதனை அந்த டான்ஸர் அவரது முகநூலில் பதிவிட்டுள்ள நிலையில், அது தற்போது வைரலாகி வருகிறது.

விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள்

விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள்

துணிவு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என அஜித் கூறிவிட்ட நிலையில், அவரது ரசிகர்களே பயங்கரமாக ப்ரோமோட் செய்து வருகின்றனர். இந்நிலையில், துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் 17ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழு தரப்பில் இருந்து வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். துணிவு படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பொங்கலுக்கு பிறகு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X