Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அடுத்தவன கூப்பிடாதீங்க..குடும்பத்துல கும்மி அடிச்சிடுவாங்க..கடுப்பாகிட்டாரா விஜய் ஆண்டனி?
சொந்தப்பிரச்சினை பேசித்தீர்த்து சமாதானமாக வாழுங்க, முடியலன்னா விலகிடுங்க, அடுத்தவன மட்டும் கூப்பிடாதீங்கன்னு மனம் நொந்து ட்வீட் போட்டிருக்கார் விஜய் ஆண்டனி.
குடும்ப பிரச்சினையில் மூன்றாவது நபர் வேண்டாம் என ஏன் இப்படி சொன்னார் விஜய் ஆண்டனி என நெட்டிசன்கள் குழம்பி வருகின்றனர்.
நடுத்தர குடும்பங்களில் இல்லாத கூடுதல் பிரச்சினை பிரபலங்களுக்கு வாழ்வில் நடக்க காரணம் பொருளாதார தன்னிறைவு காரணமாக வரும் ஈகோ தான் காரணம்.
சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா.. 9 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக மோதும் விஜய் -அஜித் படங்கள்!

புகழடைய வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை தவறா?
சமீப காலமாக கலைத்துறை சார்ந்தவர்கள் சகிப்பு தன்மையில்லாத காரணத்தினால் குடும்பத்துக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரியும் நிலை ஏற்படுகிறது. இதில் பலவகை பிரச்சினைகள் உள்ளன. ஒன்று சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலைக்கு வருபவர்கள் பெரும்பாலும் அவர்கள் வாழ்க்கையில் ஒரு நிலையை அடைய வேண்டும், உச்சத்தை அடைய வேண்டும் என்று நினைத்து வளர்வார்கள். இதனுடைய நேரடி அர்த்தம் என்னவென்று பார்த்தால் பணம் பார்ப்பது, அதிகம் சம்பாதிப்பது என்பதாக இருக்கும். இன்னொரு புறம் அதிகப் புகழை பெற வேண்டும் என்பதாக இருக்கும்.

சினிமாவுக்கு இணையான சீரியல் உலகில் தான் பிரச்சினை அதிகம்
சினிமாவுக்கு இணையாக இருக்கும் டிவி சீரியல்களில் நடிப்பவர்கள் பலர் பிரபலமானவர்களாக உள்ளனர். சிலர் பிரபலமாக ஆகி பின்னர் வாய்ப்பில்லாமல் இருக்கும் நிலை ஏற்படுகிறது. சினிமாவைப் போலவே சீரியல்களிலும் திருமணங்கள் என்பது இரண்டு பேரும் வருமானத்தில் உச்ச நிலையில் இருப்பதால் தங்கள் இஷ்டப்படி தீர்மானிக்கும் நிலை உள்ளது. நடுத்தர குடும்பங்களில் திருமணம் போன்ற விஷயங்கள் சில கட்டுப்பாடுகள் உண்டு, ஆனால் இதுபோன்று வருமானம் அதிகம் சம்பாதிக்கும் நிலையில் உள்ளவர்கள் அவர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்கிற நிலையில் என் வாழ்க்கை என் கையில் என்பது போல் வாழ்கின்றனர்.

முறையற்ற உறவுகள் சுதந்திரத்தின் வெளிப்பாடு அல்ல
இதில் சில திருமணங்கள், திருமணமானவர்கள் சிலரும் தங்களுக்குள் முதல் மனைவி அல்லது கணவனை விட்டு பிரிந்து மறுமணம் செய்வதை பார்க்கிறோம். இது போன்ற திருமணங்கள் சிலர் வாழ்க்கையில் வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் சிலர் இடையில் மீண்டும் பிரிவதை பார்க்கிறோம். இதற்கு முக்கிய காரணம் இரண்டு தரப்பிலும் நாங்கள் பணம் சம்பாதிக்கிறோம் நாங்கள் மேலானவர்கள் என்று அவரவர் குறைகளை விட்டுக் கொடுக்காமல் நடக்கும் ஈகோ கிளாஷ் தான் காரணம். மற்றொன்று இது போன்ற விஷயங்களில் பிரிவுக்கு மற்றொரு நடிகை அல்லது நடிகர் காரணமாக இருப்பதை சில சம்பவங்களில் பார்க்கின்றோம்.

பொருளாதார தன்னிறைவால் வரும் ஈகோ கிளாஷ்
தம்பதிகளாக இருக்கும் நிலையில் இன்னொருவருடன் பழக்கம் ஏற்பட்டு அதனால் பிரியும் சூழலும் ஏற்படுவதை பார்க்கின்றோம். இது போன்ற அனைத்து திருமணங்களின் முறிவுக்கு அடிப்படை ஏற்கனவே சொன்னது போல் பொருளாதார சுதந்திரம் அடைந்த ஆணும், பெண்ணும் ஒருமித்த உணர்வுடன் திருமண பந்தத்தில் இணைவதற்கு அதிக சகிப்புத்தன்மை வேண்டும். நீ பெரியவரா? நான் பெரியவரா? என்று இருவரில் ஒருவர் பார்த்தாலும் அங்கு ஒன்றுபட்ட ஒற்றுமையான குடும்பம் என்பது நீடிக்க வாய்ப்பு இல்லை. அதனால் தான் பெரும்பாலான கலைத்துறை சார்ந்தவர்கள் அல்லது புகழின் உச்சியில் இருப்பவர்கள் அல்லது சீரியல் நடிகர், நடிகைகள் திருமணம் தோல்வியில் முடிவதை காரணமாக பார்க்க முடிகிறது.

கர்ப்பமான நடிகை, அவரது கணவர் இடையே பொதுவெளியில் வந்த பிரச்சினை
பரபரப்பான வாழ்க்கை, புகழின் உச்சம், பெரிய அளவில் வருமானம், பொருளாதார தன்னிறைவு யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை என்கிற மனப்பான்மை, ஈகோ போன்ற காரணங்களை தவிர்த்து ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்ந்தால் எந்த பிரச்சனையும் இருக்க வாய்ப்பில்லை. இவைகளை மீறும் பொழுதுதான் சிக்கல்கள் எழுகிறது. சமீபத்தில் ஒரு தம்பதி திருமணமாகி அவர் கர்ப்பமான நிலையில் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் அதைப்பற்றி வெளியில் பேட்டி கொடுப்பதும், அந்த பேட்டிகள் வரிந்து கட்டிக்கொள்ளப்பட்டு பெரிதாக எழுதப்படுவதும், ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றஞ்சாட்டிக் கொள்வதையும் பார்க்க முடிகிறது.

கும்மியடிப்பது நண்பர்கள் மட்டுமல்ல ஊடகங்களும்தான்
இது போன்ற விஷயங்களில் ஒருவர் சாதாரணமாக சொல்லும் விஷயம் கூட ஊடகங்கள் மூலம் பெரிதாக குற்றச்சாட்டாக வைக்கப்பட்டு இது பிளவை மேலும் அதிகப்படுத்தும் ஒரு சூழலை உருவாக்குவதாக அமைகிறது. அதே போல் இருவருக்கும் உள்ள பிரச்சனையை தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ளாமல் பொதுவெளியில் அதை கொண்டு வரும் பொழுது நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் ஆலோசனை சொல்கிறேன் அறிவுரை சொல்கிறேன் என்று வருபவர்கள் பிளவை மேலும் பெரிதாக்கும் சூழல் உருவாகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்கிற அடிப்படையில் நடிகர் விஜய் ஆண்டனி ஒரு ட்வீட்டை போட்டுள்ளார்.

தற்போதைய விஷயங்களை பார்த்துத்தான் ட்வீட் போட்டாரோ
தற்போது நடக்கும் விவகாரங்களை பார்த்து தானோ என்னவோ விஜய் ஆண்டனி ஒரு ட்வீட் போட்டு உள்ளார். அவர் ஏன் இந்த ட்வீட்டை போட்டார் என்கிற வாதத்தில் நெட்டிசன்கள் குதித்து விட்டனர். அவர் இதற்காகத்தான் போட்டார், அதற்காகத்தான் போட்டார் என்று வாதங்கள் ஓடுகின்றன. அவர் சொந்த வாழ்க்கையில் எதுவும் பாதிக்கப்பட்டாரா எனவும் சிலர் அவரது ட்விட்டுக்கு கீழே பதிவிடுகின்றனர். அவர் எதற்காக போட்டாலும் அவர் ட்வீட்டில் உள்ள முக்கியமான அவர் குறிப்பிடும் விஷயம் என்னவென்றால் உங்கள் பிரச்சனைகளை நீங்கள் மட்டுமே பேசி தீர்க்க வேண்டும்.

விஜய் ஆண்டனி எச்சரிக்கிறாரா? அறிவுறுத்துகிறாரா?
இதை பொதுவெளியிலோ அல்லது வேறு யாரிடமோ கொண்டு சென்றால் அவர்கள் உங்கள் இருவருக்கும் இடையில் பஞ்சாயத்து செய்கிறேன் என்று கும்மியடித்துவிட்டு செல்வார்கள். ஆகவே தயவு செய்து ஒருவர் பிரச்சனையை அவர்களுக்குள் பேசி தீர்க்க உதவுங்கள். வீணாக அடுத்தவர் பிரச்சனை நுழைந்து கும்மி அடிக்காதீர்கள் என்று காட்டமாக போட்டு உள்ளார். இதை அறிவுரையாகவும் எடுத்துக் கொள்ளலாம், எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ளலாம். தற்போது சமூக வலைதளங்களிலும் திரையுலகினர் மத்தியிலும் விஜய் ஆண்டனியின் இந்த ட்வீட் பரபரப்பாக பேசப்படுகிறது.