twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே'... இளையராஜாவின் குரலைக் கேட்டு ஆர்ப்பரித்தக் கூட்டம்!

    இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கி வைத்தார்.

    |

    Recommended Video

    Ilaiyaraja Speech:கடவுளை சிறுமைப்படுத்த வேண்டாம் என இளையராஜா- வீடியோ

    சென்னை : தன்னை கடவுளுடன் ஒப்பிட்டு, கடவுளை சிறுமைப்படுத்த வேண்டாம் என இளையராஜா கூறினார்.

    தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப்பணியை பாராட்டி, இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    Dont compare me with god, says Ilaiyaraja

    இந்த நிகழ்வுக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கப்பட்டது. சென்னையை அடுத்த மறைமலைநகர் மகேந்திரா சிட்டியில் நடைபெற்று வந்த 5வது தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவில் நடந்த நிகழ்ச்சியில் இளையராஜா மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு டிக்கெட் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் பேசிய விஷால் உள்ளிட்ட பலரும் இளையராஜாவை இசை கடவுள் என புகழ்ந்தனர். பின்னர் பேசிய இளையராஜா கடவுளுடன் தன்னை ஒப்பிட்டு பேச வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

    இதுகுறித்து அவர் பேசியதாவது,

    "இங்கு பேசிய எல்லோரும் கடவுளை ரொம்ப இறக்கிவிட்டனர். என் லெவலுக்கு கடவுளை எப்படி இறக்க முடியும். அது தவறு. நான் கடவுள் கிடையாது.

    நானும் ரத்தமும் சதையும் கொண்ட மனிதன் தான். என்னை கடவுள் என குறிப்பிடாதீர்கள். மற்றவர்களை போல நானும் ஒரு சாதாரண மனிதன் தான்.

    இந்த டிக்கெட் விற்பனை தொடக்க விழாவே இவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது என்றால், இசை விழா எப்படி இருக்கும் என யோசித்துக்கொள்ளுங்கள்" எனக் கூறி இதயம் ஒரு கோயில் பாடலை முதல் சரணத்தில் இருந்து அவர் பாடினார்.

    ஆத்ம ராகம் ஒன்றில் தான் ஆடும் உயிர்கள் என்றுமே என பாடத் தொடங்கியதும், கூட்டம் ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. அவர் அந்த சரணத்தை முழுமையாக பாடி முடிக்கும் வரை ஆர்ப்பரிப்பு தொடர்ந்தது.

    English summary
    After launching the ticket sales for ‘ILAIYARAAJA 75’, music director Ilaiyaraja asked the people to avoid comparing him with god.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X