»   »  பெரிசா எதிர்ப்பார்க்காதீங்க...- என்னை அறிந்தால் பற்றி கவுதம் மேனன் கமெண்ட்

பெரிசா எதிர்ப்பார்க்காதீங்க...- என்னை அறிந்தால் பற்றி கவுதம் மேனன் கமெண்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அதிக எதிர்ப்பார்ப்புகளே சில படங்களுக்கு ஆபத்தாக அமைந்துவிடுவதை இப்போதல்லாம் பார்க்க முடிகிறது.

அப்படி ஒரு நிலை அஜீத்தை வைத்து தான் உருவாக்கியுள்ள என்னை அறிந்தால் படத்துக்கு வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் கவுதம் மேனன்.

Don't expect too much from Yennai Arinthaal, says Goutham Menon

அதனால் படம் பார்க்கும் ரசிகர்களை இப்போதிலிருந்தே தயார்ப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அஜீத் நடித்துள்ள இந்தப் படத்தைப் பார்க்க பெரிய எதிர்ப்பார்ப்புடன் வர வேண்டாம். இது ஒரு சிம்பிள் படம். வழக்கமாக அஜீத் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது இதில் இருக்காது," என்று குறிப்பிட்டுள்ளார்.

தனக்காக தேவையில்லாமல் எந்த காட்சியையும் திணிக்க வேண்டாம். ஸ்க்ரிப்ட்படி எடுங்கள் என்று ஏற்கெனவே கவுதமிடம் கூறியிருந்தாராம் அஜீத். அவரது பேச்சை மீறாமல் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், கதைக்கு என்ன தேவையோ அதைமட்டும் செய்திருக்கிறார் அஜீத் என்கிறார்கள்.

English summary
In a recent interview, Yennai Arindhaal's director Gautham Menon has asked his audience not to expect anything extravagant from his upcoming film that stars Ajith Kumar in the lead.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil