அது மட்டும் செய்ய வேண்டாம்..உதயநிதி பற்றி அவருடைய அப்பாவிடம் நான் பேசினேன்..விக்ரம் விழாவில் கமல்

உதயநிதி ஸ்டாலின் உண்மையை தைரியமாக பேசுகிறார் அதற்கு அவரை பாராட்ட வேண்டும் என்று கமல் பாராட்டினார்.

உதயநிதி ஸ்டாலினை பற்றி அவரது தந்தை ஸ்டாலினிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன் என்று கமல் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் என்ன செய்யவேண்டும் என்று விக்ரம் பட விழாவில் கமல்ஹாசன் நேரிலேயே கோரிக்கை வைத்தார்.

அனைவரிடமும் நட்பு பாராட்டும் கமல்ஹாசன்

அனைவரிடமும் நட்பு பாராட்டும் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையத்தின் தலைவராக இருக்கிறார். அரசியல் கட்சி தலைவராக இருக்கும் கமல்ஹாசன் தன்னுடைய அரசியல் தாண்டி அனைவரிடமும் நட்பு பாராட்டி வருகிறார். முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட பொழுது முதன்முதலில் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் கமல்ஹாசன். அதே போன்று திரைத்துறையில் தனக்கு போட்டியாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் உடன் எப்பொழுதும் நெருக்கமான நட்பு பாராட்டுகிறவர் கமல்ஹாசன்.

விக்ரம் பட உரிமையை கேட்டு வாங்கிய உதயநிதி

விக்ரம் பட உரிமையை கேட்டு வாங்கிய உதயநிதி

கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான விக்ரம் படத்தில் கமல் தவிர பிரபல நடிகர்கள் நடித்திருந்தனர். படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது படம் நன்றாக போகும் என்கிற நிலையில் தமிழக விநியோக உரிமையை வேறு நிறுவனம் ஏற்பதாக இருந்தது. இந்நிலையில் உதயநிதி கேட்டு கொண்டதால் ரெட் ஜெயண்ட் மூவிஸிற்கு கமல் வழங்கினார். இதை நன்றியோடு நினைவு கூர்ந்து உதயநிதி விக்ரம் 100 வது நாள் வெற்றி விழாவில் பேசினார்.

விக்ரம் படம் மூலம் இவ்வளவு லாபம்..வெளிப்படையாக தொகையைச் சொன்ன உதயநிதி

விக்ரம் படம் மூலம் இவ்வளவு லாபம்..வெளிப்படையாக தொகையைச் சொன்ன உதயநிதி

அப்பொழுது பேசிய உதயநிதி "எங்களுக்கு கமல் வாய்ப்பு கொடுத்தார் படத்தை பார்த்துவிட்டு படம் வெளியான பின் இன்னும் சில பகுதிகளையும் சேர்த்து வாங்கி இருக்கலாமோ என்று யோசித்தோம். அது மட்டுமல்லாமல் தன்னுடைய ரெட் ஜெயன்ட் நிறுவனம் விக்ரம் படம் மூலம் அடைந்த லாபம் பற்றி வெளிப்படையாக இன்று வரை சொல்லவில்லை, இன்றுவரை எங்களுடைய ஷேர் மட்டுமே ரூ.75 கோடி கிடைத்துள்ளது" என்று வெளிப்படையாக சொன்னார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் கடந்த ஓராண்டில் பல்வேறு படங்களை ரிலீஸ் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் விக்ரம் படம் பெற்றது. இதை சுட்டிக்காட்டி கமல்ஹாசன் மேடையில் பாராட்டினார்.

உதயநிதியின் நேர்மையை பாராட்டிய கமல்

உதயநிதியின் நேர்மையை பாராட்டிய கமல்

உதயநிதி ஸ்டாலினை பாராட்டிய கமல் பேசும்போது "நீங்கள் வெளிப்படையாக உண்மையை பேசுகிறீர்கள், உங்கள் நேர்மை எனக்கு பிடித்துள்ளது. யாரும் சொல்ல தயங்காத விஷயத்தை கூட இன்று மேடையில் விக்ரம் படத்தில் உங்களுக்கு கிடைத்த ஷேர் பற்றி சொன்னீர்கள். அது பாராட்ட வேண்டிய விஷயம். இப்படி இருப்பவர்கள் வாழ்க்கையில் நல்ல இடத்தை அடைகிறார்கள். உங்களை தனியாக பாராட்டுவதை விட உங்கள் தந்தையிடம் நான் தனியாக பேசிவிட்டேன். எதற்கு விநியோகம் என்று வீண் பிரச்சினை. நடிப்பது, அரசியலை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கலாமே என்று அப்பா சொன்னதாக கேள்விப்பட்டேன், நான் உடனடியாக அப்பாவிடம் பேசினேன், தயவு செய்து அப்படி முடிவெடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன், ஆனால் மற்றதை விட நீங்கள் இதில்தான் கட்டாயம் இருக்கவேண்டும் என்று நன் விரும்புகிறேன்" என்று கமல் சிரித்துக் கொண்டே சொன்னார் அதை சிரித்துக்கொண்டே ஆமோதித்து தலையாட்டினார் உதயநிதி.

உங்க அப்பா கிட்ட உங்களைப்பற்றி பேசிட்டேன்..உதயநிதியிடம் சொன்ன கமல்

உங்க அப்பா கிட்ட உங்களைப்பற்றி பேசிட்டேன்..உதயநிதியிடம் சொன்ன கமல்

பின்னர் பேசிய கமல் "உங்களால் பலரும் வாழ்க்கை பெறுவார்கள் என்னை மட்டும் சொல்லவில்லை, என்னை தாண்டி பல நல்ல படங்களை எடுப்பவர்கள் நீங்கள் ஆதரித்தால் திரைத்துறை வளரும். அதற்காக நீங்கள் இந்த விநியோகத்துறையிலேயே இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. எந்த காரணம் வேண்டும் விநியோகத் துறையை விட்டு விடாதீர்கள். அதில் ஏதாவது பிரச்சனை வந்தால் என்னிடம் வாருங்கள் தயக்கம் இல்லாமல் சொல்கிறேன் இது போன்ற ஒரு பரிமாறுதல் தான் தமிழ் திரையுலகை வளர்த்தெடுக்கும். நான் உங்கள் தந்தையிடம் பேசி பேசினேன், நீங்கள் எக்காரணம் கொண்டும் விநியோகத் துறையை விட்டு விடாதீர்கள் என்று கமல்ஹாசன் உதயநிதி பார்த்து சொல்ல உதயநிதி சிரித்துக்கொண்டே தலையாட்டினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X