Don't Miss!
- News
வள்ளுவரை விட கருணாநிதி சிறந்தவரா? பேனா நினைவு சின்ன கருத்து கேட்பு கூட்டத்தில் பாஜக கேள்வி-சலசலப்பு
- Finance
Budget 2023: பட்ஜெட் நாளில் கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தை எப்படி இருந்தது தெரியுமா?
- Sports
அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஜிபி முத்துவோட இன்னொசன்ஸை வச்சி விளையாடக் கூடாது.. ராபர்ட் மாஸ்டரை திட்டும் ஆர்மி!
சென்னை: பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளர்கள் பலரும் தெரியாத முகங்கள் என்பதால் நிகழ்ச்சியை பார்க்கும் ஆர்வம் அனைவருக்கும் எழுந்துள்ளது.
பிக் பாஸ் அல்டிமேட்டை போல இந்த ஷோ இருக்காது என்பதை புரிந்து கொண்டே 24 மணி நேரமும் ஓடிடியில் வெளியிட்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க என பிக் பாஸ் டீம் முடிவு செய்துள்ளது.
விஜய் டிவியிலும் ஒரு மணி நேரம் ஷோ ஓடுவதால், இந்த முறை நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட வரவேற்பு அதிகரித்துள்ளது.
“நேத்து ராத்திரி எம்மா“மழையில் ஆட்டம் போட்ட ஜிபி முத்து..பிக் பாஸ் வீட்டில் மாஸ் காட்டுறாரே?

ஜிபி முத்து தான் ஹைலைட்
டிக் டாக் மூலம் ரசிகர்களின் செல்போன்களில் வந்து சிரிக்க வைத்த ஜிபி முத்து இப்போ பிக் பாஸ் மூலம் உலகளவில் பெரிய டிவியில் வந்து மக்களை மகிழ்வித்து வருகிறார். கமலிடமே ஆதாமான்னு கேட்ட கேள்வி சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி விட்டது. பைபிளில் இருக்கும் ஆதாம் ஏவாள் பெயரை கமல் ஏன் பயன்படுத்தினார் என்று விவாதங்களும் ராஜ ராஜ சோழன் விவகாரத்துக்கு பிறகு பெரிதாக கிளம்ப காரணமே ஜிபி முத்து தான்.

விளையாட பார்க்குறாங்க
ஜிபி முத்துவை பிராங்க் பண்ண நினைத்து கமல் ஒரு பக்கம் சிக்கித் தவித்து வரும் நிலையில், தூங்கும் போது ஜிபி முத்துவின் கால்களை சீண்டி அவரை அலற விட்டு விளையாடிய ராபர்ட் மாஸ்டரை தற்போது சோஷியல் மீடியாவில் ஜிபி முத்து ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இன்னொசன்ஸ மிஸ்யூஸ் பண்றாங்க
ஜிபி மித்துவோட இன்னொசன்ஸ ஓவரா மிஸ்யூஸ் பண்றாங்க.. எப்படி பார்த்தாலும், தலைவனுக்குத் தான் ஓட்டு என ஜிபி முத்துவின் பிரம்மாண்ட ஆர்மி சோஷியல் மீடியா முழுவதும் அவருக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட்களை தெறிக்கவிட்டு வருகிறது.

ஜிபி முத்து ஆர்மி
முதல் சீசனில் ஓவியா ஆர்மி, 4வது சீசனில் ஆரி ஆர்மியை எல்லாம் ஒரே நாளில் பீட் செய்து விடுவது போல ஜிபி முத்து ஆர்மி சமூக வலைதளங்களில் படு மாஸ் காட்டி ஒன்று திரண்டு வருகின்றனர். நாமினேஷனுக்கு ஜிபி முத்து வந்தால், அவர் வெளியவே போக மாட்டார் என்றும் ஒட்டுமொத்த மக்கள் பலம் அவருக்கு எவ்வளவு இருக்கு என தெரிந்து விடும் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

பெயரை கெடுத்து
அவரோட இன்னொசன்ஸ ரொம்பவே வச்சி விளையாடுறாங்க, ஜிபி முத்துவோட பெயரை கெடுத்து வெளியே அனுப்ப போறாங்க.. அதான் நடக்கப் போகுது என ராபர்ட் மாஸ்டர் நள்ளிரவில் ஜிபி முத்துவை அலற வைத்த வீடியோவை ஷேர் செய்து திட்டி வருகின்றனர்.

மெண்டல் பயலுவளா
தலைவர் மைண்ட் வாய்ஸ்.. ஏலே மெண்டல் பயலுவளான்னு திட்டிட்டு இருப்பாரு.. இன்னும் கொஞ்சம் டார்ச்சர் பண்ணிங்கனா, அவர் வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டப் போறாருன்னு கமெண்ட் போட்டு கதிகலங்க வைத்து வருகின்றனர்.