»   »  நடிகர் சங்க நிலத்தை யாருக்கும் தரக் கூடாது... மீண்டும் நமக்குக் கிடைக்காது! - நாசர்

நடிகர் சங்க நிலத்தை யாருக்கும் தரக் கூடாது... மீண்டும் நமக்குக் கிடைக்காது! - நாசர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்க நிலத்தை யாருக்கும் விற்கக் கூடாது. தனியார் நிறுவனம் கட்டிடம் கட்டினால் அதை பின்னர் மீட்கவே முடியாது என அச்சம் தெரிவித்துள்ளார் நாசர்.

நடிகர் சங்க கட்டிடம் தொடர்பான ஒப்பந்தம் குறித்து சரத்குமார் நேற்று விளக்கம் அளித்துள்ளார். இதற்கு பதில் அளித்து விஷால் அணி சார்பாக நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர் கூறியதாவது:

Don't sell or lease Nadigar Sangam land - Nasser

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தில் தனியார் நிறுவனம் கட்டிடம் கட்டுவது குறித்து 3 ஒப்பந்தங்கள் போட்டு இருக்கிறார்கள். பல பக்கங்கள் கொண்ட இந்த ஒப்பந்தத்தை முழுவதுமாக படித்துப் பார்த்தால்தான் உண்மை நிலை தெரியும்.

தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக அந்த ஒப்பந்தத்தில் உள்ள பல விஷயங்களை மறைக்கிறார்கள்.

8 மாதங்களுக்கு முன்பே அந்த ஒப்பந்தம் பற்றிய விவரங்களை நாங்கள் கேட்டோம். ஆனால் தரவில்லை. இப்போது பத்திரிகையாளர்களிடம் கோர்ட்டு மூலம் வாங்கிய ஒரு ஒப்பந்தத்தை பொதுவாக சரத்குமார் காட்டி இருக்கிறார். நாங்கள் கேட்டபோது ஒப்பந்தத்தை எங்களிடம் காட்டி இருந்தால் அது சரியான ஒப்பந்தமாக இருந்திருந்தால் தேர்தலில் நாங்கள் போட்டியிடும் நிலை வந்திருக்காது.

இந்த ஒப்பந்தத்தின்படி நடிகர் சங்க நிலம் முழுவதும் தனியார் நிறுவனம் கட்டிடம் கட்டிக் கொள்ளும், நடிகர் சங்கத்துக்கு ஏதோ ஒரு சிறிய அலுவலகம் கிடைக்கும். ஆனால் இந்த இடத்தை வைத்துக் கொண்டு கோடி கோடியாக சம்பாதிக்கப் போகிறது அந்த நிறுவனம். ஒப்பந்த காலம் முடிந்த பிறகு அவர்கள் நிச்சயம் வெளியேற மாட்டார்கள். இதனால் நடிகர் சங்கத்துக்கென ஒரு இடமே இல்லாமல் போய்விடும். நமக்கான அடையாளமும் போய்விடும்.

வருமானம் மட்டும் பெரிதல்ல. மூத்த கலைஞர்கள் மிகவும் சிரமப்பட்டு வாங்கிய அந்த இடத்தை சுயநலத்துக்காக தனியாருக்கு தாரை வார்ப்பது எத்தனை பெரிய தவறு. அதைத்தான் நாங்கள் கேட்கிறோம். நமது அடையாளத்தை மீட்டெடுப்போம்," என்றார்.

English summary
Actor Nasser says that the Nadigar Sangam land should not be sold to any private parties.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil