twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருடாதே.. கதைகளை திருடாதே.. பாக்யராஜ் அன்பு வேண்டுகோள்!

    |

    சென்னை : இன்றைய இளம் இயக்குனர்கள் தயவு செய்து கதைகளை திருடாதீர்கள் என்று பாக்யராஜ் வேண்டுகோள் விடுத்தார்.

    பாக்யராஜ் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் முன்னோடியான இயக்குனரும் கூட ,சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் பல விசயங்களையும் சினிமா பற்றிய தனது அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார் . நாளை இளம் தலைமுறையினர் எவ்வாறு சினிமா இயக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

    கே.பாக்யராஜ் அவர்கள் உதவி இயக்குனராக 16வயதினிலே படத்தில் வேலை பார்க்கும் போது ரீல் பெட்டியை உற்று பார்த்து கொண்டிருந்தாகவும் இயக்குனர் பாரதிராஜா ஏன்டா அதையே உற்று பாத்திட்டு இருக்க என்று கேட்க இதை திறந்து பார்க்கலாமா என்று பாக்யராஜ் கேட்டாராம் அதற்கு பாரதிராஜா என் புழப்புள மண்ண வாரி போட பாத்தியேடா அது ரீல் அத துறந்தா எல்லாம் போயிடும் என்று அதற்கு பிறகு ரீல் பத்தியும் அது சார்ந்து விசயங்கள் பற்றியும் தான் கற்று கொண்டதாகவும் கூறினார் பாக்யராஜ்

    இன்றைய அரசியல்

    இன்றைய அரசியல்

    மேலும், இன்றைய அரசியலை நிலை குறித்தும் விமர்சித்து பேசினார் கே.பாக்யராஜ். இங்கு உள்ள அரசுக்கு பெரிய கவலை இருக்கிறது அது எப்படி கொள்ளை அடிக்கலாம் என்பது தான், ஏனெனில் இப்போது இருக்கும் அரசு மணல் கொள்ளை டாஸ்மாக்கில் லாபம் என்று இருக்கிறார்கள் என்றால் அதை பற்றி எதிர்கட்சிகள் பேசுவது இல்லை ஏனெனில் நாளை அவர்கள் வந்து கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காக மௌனம் காத்தே இருக்கிறார்கள் என்று பாக்யராஜ் குற்றம் சாட்டினார்.

    சினிமானா பிடிக்காது

    சினிமானா பிடிக்காது

    சினிமாக்குள் வரும்போது அந்த காலத்தில் எங்களுக்கு எதுவும் கற்று வரவில்லை, சினிமாக்குள் வந்த பிறகு தான் நாங்கள் கற்று கொண்டோம். அப்போது சினிமா என்றால் யாருக்கும் பிடிக்காது அதனாலையே நாங்கள் எதையும் கற்று கொள்ள முடியவில்லை ஆனால் தற்போது காட்சி தொடர்பியல் படிப்பு வந்து பலரும் படித்து வருகிறார்கள் என்றார்.

    சொந்த ஊரில் என் படம்

    சொந்த ஊரில் என் படம்

    விடுமுறையில் நான் சொந்த ஊருக்கு செல்வேன், எங்க கிராமம் எப்படி இருக்கும் தெரியுமா? எந்த வசதியும் இல்லாத அந்த கிராமத்தில் டென்ட் கொட்டகைக்கு வந்து தான் மக்கள் படத்தை வியந்து பார்ப்பார்கள். அப்போது, நானும் எனது நண்பர்களிடம் ஒரு நாள் இந்த டெண்ட் கொட்டகையில் படம் பார்த்து விட்டு, ஒரு நாள் இந்த கொட்டகையில் என் படமும் ஓடும் என்று கூறியதாகவும் அதே போல் தனது பட சூட்டிங்கிற்கு அந்த ஊர் சென்ற போது என் படத்தை திரையிட்டார்கள் அப்போது பலரும் நீ கொடுத்த வாக்கை நிரைவேற்றி விட்டாய் பாக்யா என்று வாழ்த்து கூறியதாகவும் கூறினார் பாக்யராஜ்.

    கதையை திருடாதீர்கள்

    கதையை திருடாதீர்கள்

    கடைசியாக நாளைய இளம் இயக்குனர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்னே ஒன்னுதான், அதில் இன்றைய இயக்குனர்கள் பலரும் கதையை திருடிவிட்டு அது எங்கள் கதை, நான் திருடவில்லை என்று மழுப்பும் பலர் இருக்கிறார்கள். நான் எல்லாம் அப்படி இல்லை எடுத்தால் ஒத்து கொள்வேன் இன்றைய பல இயக்குனர்கள் மிகவும் மோசம் இப்படி நாளைய வளரும் இயக்குனர்கள் இப்படி இருக்க வேண்டாம் என்று வேண்டுகொள் விடுத்தார். மேலும், இதற்கு ஒரு எடுத்து காட்டு கூறிய பாக்யராஜ் ஒரு கதையை திருடுவது என்பது ஒருத்தரின் ஆடையை திருடவது போல் அந்த ஆடை உங்களுக்கு பத்தலாம் ஆனால் அது உண்மையில் பழைய ஆடை தான் என விளக்கத்துடன் கூறினார் பாக்யராஜ்.

    English summary
    Don't steal stories, bhagyaraj advice
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X