»   »  'படத் தலைப்பில் சாதி வேண்டாம்'.. கமலுக்கு வி.சி.க. ரவிகுமார் அறிவுரை

'படத் தலைப்பில் சாதி வேண்டாம்'.. கமலுக்கு வி.சி.க. ரவிகுமார் அறிவுரை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'படத் தலைப்பில் சாதிப் பெயர் வேண்டாம் என நடிகர் கமலுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமார் அறிவுரை கூறியிருக்கிறார்.

ராஜீவ் குமார் இயக்கத்தில் கமல், ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'சபாஷ் நாயுடு' படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

கமல்ஹாசன் 'சபாஷ் நாயுடு' என தலைப்பு வைத்தவுடன் சமூக வலைதளங்களில் இப்படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டன.

Don't Use Caste Name in Movie Title says VCK Ravi Kumar

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும்,வானூர் தொகுதியின் வேட்பாளருமான ரவிகுமார் கமலுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் ''தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சாதிவெறி தலைவிரித்தாடுகிறது. முன்பு ஹரியானாவில் மட்டுமே இருப்பதாகப் பேசப்பட்ட ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை இங்கு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.

Don't Use Caste Name in Movie Title says VCK Ravi Kumar

இந்நிலையில் சாதியின் பெயரை படத்தின் தலைப்பாகவோ பாத்திரங்களின் பெயர்களாகவோ பயன்படுத்துவது தமிழகச் சூழலை மேலும் சீரழிப்பதாகவே அமையும்.

முன்னர் அப்படி தலைப்பு வைத்து கமல்ஹாசன் எடுத்த படத்தின் பாதிப்பு இன்னும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் தொடர்ந்து கொண்டிருக்கும்போது மீண்டும் அப்படியொரு விபரீத முயற்சியில் ஈடுபடவேண்டாம் என கமல்ஹாசன் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

தலைப்பிலோ வசனங்களிலோ சாதிப் பெருமிதத்தை வெளிப்படுத்தும் திரைப்படத்துக்கு தமிழக அரசு கேளிக்கைவரியிலிருந்து விலக்கு அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்'' என்று கூறியிருக்கிறார்.

English summary
VCK General Secretary Ravi Kumar Advice to Kamal Haasan 'Don't Use Caste name in Movie Titles'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil