»   »  இந்தியாவிலிருந்து வெளியேற விரும்பவில்லை.. இங்கேயே வாழ்ந்து சாக வேண்டும்! - ஆமிர்கான்

இந்தியாவிலிருந்து வெளியேற விரும்பவில்லை.. இங்கேயே வாழ்ந்து சாக வேண்டும்! - ஆமிர்கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவிலிருந்து நான் ஒரு போதும் வெளியேற மாட்டேன். ஒரு இந்தியனாக இங்குதான் வாழ்ந்து சாக விரும்புகிறேன், என்று கூறியுள்ளார் நடிகர் ஆமிர்கான்.

சகிப்பின்மை குறித்து பாலிவுட் நடிகர் ஆமிர்கான் சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்த கருத்திற்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாட்டைவிட்டு வெளியேறிவிடலாமா என்று தன் மனைவி கூறியதாக ஆமிர்கான் தெரிவித்ததை வைத்து பெரும் சர்ச்சையை உருவாக்கினர்.

Don't want to leave India, want to live here and die here: Aamir Khan

இந்நிலையில், நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாக தான் ஒருபோதும் கூறவில்லை என்று அமீர்கான் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கருத்து மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து அமீர்கான் பேசுகையில், "இந்தியாவை விட பிரிவினைகள் அதிகமுள்ள நாடு வேறு எதுவும் இல்லை என்பது உண்மைதான்.

நான் இந்தியாவில்தான் பிறந்தேன், இங்கு தான் இறப்பேன், ஒருபோதும் வெளியேறமாட்டேன்.

இந்தியா சகிப்பின்மை நாடாக உள்ளது என்றோ நாட்டைவிட்டு வெளியேறுவேன் என்றோ நான் ஒருபோதும் கூறவில்லை. என்னுடைய கருத்தால் காயமடைந்தவர்களின் வலியையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

என்னுடைய நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். எப்பொழுதெல்லாம் நான் வெளிநாடு செல்கிறனோ, என்னால் இரண்டு வாரங்களுக்கு மேல் என்னால் அங்கு இருக்க முடியாது. வீட்டை விட்டு பிரிந்த துயரத்தில் மூழ்கிவிடுவேன்," என்றார்.

English summary
Bollywood actor Aamir Khan on Monday claimed he was misunderstood over his intolerance remark and said he is a patriotic person who would not think of leaving the country.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil