»   »  பாகுபலி போன்ற படத்தை எடுக்க விரும்பவில்லை, பணமும் இல்லை: 'இயக்குனர்' ஏ.ஆர். ரஹ்மான்

பாகுபலி போன்ற படத்தை எடுக்க விரும்பவில்லை, பணமும் இல்லை: 'இயக்குனர்' ஏ.ஆர். ரஹ்மான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாகுபலி போன்ற பிரமாண்ட படத்தை எடுக்க விரும்பவில்லை, அதற்கு பணமும் இல்லை என்று இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் லே மஸ்க் என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். வெர்ச்சுவல் ரியாலிட்டி படமான இதில் நோரா அர்னெசெடர், கை பர்னட், முனிரிஹ் கிரேஸ், மரியம் ஜொராபியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படம் குறித்து ரஹ்மான் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறும்போது,

பிரமாண்டம்

பிரமாண்டம்

வெர்ச்சுவல் ரியாலிட்டியில் பிரமாண்டம் ஓவராகத் தெரியும். உதராணமாக பாகுபலியில் உள்ளது போன்ற ஒரு போர் காட்சியில் அழுத்தத்தை உணர்வீர்கள். அதுவே 3டியில் கூடுதல் அழுத்தத்தை உணர்வீர்கள்.

 பாகுபலி

பாகுபலி

பாகுபலி போன்ற பிரமாண்ட படத்தை எடுக்க நான் விரும்பவில்லை. ஏன் என்றால் அது போன்ற பிரமாண்ட படங்களை இயக்க பிரமாண்ட இயக்குனர்கள் உள்ளனர். மேலும் என்னிடம் ரூ. 200 கோடி இல்லை.

இசை

இசை

நான் இசை, அழகு போன்றவற்றை உருவாக்க விரும்புகிறேன். மக்கள் திரும்பி வர விரும்பாத அளவுக்கு ஒரு உலகை உருவாக்க விரும்புகிறேன். என் படத்தில் நெகட்டிவ் விஷயங்களை கூட கவிதையாக அளிக்க முயற்சி செய்துள்ளேன்.

பிவிஆர்

பிவிஆர்

லே மாஸ்க் என்னும் வெர்ச்சுவல் ரியாலிட்டி படத்தை எடுக்க பிவிஆர் நிறுவனம் ஊக்கிவித்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வெர்ச்சுவல் ரியாலிட்டி தான் இனி எதிர்காலம் என்றார் ரஹ்மான்.

English summary
Music maestro A R Rahman, who hasmade his directorial debut with a multisensory virtual reality film, doesn't believe that a grand war epic like ‘Baahubali’ lends itself to the medium.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil